தமிழகத்தில் இன்று (நவ.,07) 9 மாவட்டங்களிலும், நாளை (நவ.,08) 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.