தனுஷ் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்தால் எப்படி இருக்கும் என சில ரசிகர்கள் பேசி வருகின்றனர். சோஷியல் மீடியாவில் ஒரு சில ரசிகர்கள் பிரதீப் தனுஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற தங்களின் ஆசையை கூறி வருகின்றனர்.
பிரதீப் ரங்கநாதன் ஒரு ஹீரோவாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து சென்சேஷனல் நாயகனாக உருவெடுத்திருக்கின்றார். ஹாட்ரிக் வெற்றி மட்டுமல்லாமல் அவர் ஹீரோவாக நடித்த மூன்று படங்களுமே நூறு கோடி வசூலை பெற்ற படங்களாகும். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்தே அவரை தனுஷுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். அவரின் நடிப்பு அப்படியே தனுஷ் போலவே இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.
அவரை அடுத்த தனுஷ் என்றும் ஒரு சிலர் சொல்கின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தற்போது ரசிகர்களுக்கு ஒரு ஆசை தோன்றியிருக்கிறது. அதாவது தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல படங்களை அடுத்தடுத்து இயக்கி வருகின்றார். எனவே தனுஷின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்தால் சிறப்பாக இருக்குமே என்ற தங்களது ஆசையை சில ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கூறி வருகின்றனர்.