கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண், கடந்த சில வருடங்களாக தனிமையில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் நேற்று முன்தினம் (14.11.2025) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
45 வயது உடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இவர் புலோலி வடக்கு பறித்துறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சடலத்தின் பிரேத பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.