ம்பிலிப்பிட்டிய வீரசிங்கபுர பகுதியில் நேற்று (23) தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் வீரசிங்கபுர, எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என்று எம்பிலிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய விசாரணையில், இந்தக் கொலை மூன்று நபர்களால் தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.