உக்குவளை பிரதேசத்தில் டெங்கு பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மாபேரிய எனும் கிராம பகுதியில் அதிகளவில் டெங்கு நுளம்புகள் காணப்பட்டதையடுத்து சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையில் அவர்களுடன் டெங்கு ஒழிப்புப் பிரிவினர் அப் பிரதேசமெங்கும் டெங்கு நுளம்புகளை அழிக்கும் புகை விசினர்
இதையடுத்து சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கையில் டெங்கு தற்போது பல இடங்களிலும் தலைதூக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இந்நிலையில் மக்கள் தம் வீட்டு சுற்றுப்புறச் சூழலை எப்போதும் துப்புரவாக வைத்திருப்பதுடன் டெங்கு பரவ ஏதுவான பாத்திரங்கள் தண்ணீர் தேங்கும் இடங்கள் ஆகியனவற்றை இல்லாமற் செய்வதுடன் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள் குறிப்பாக சிறுவர்கள் விஷயத்தில் பெற்றோர் நோய்கள் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளதுடன் நோய்க்கான அறிகுறிகள் தம்மில் காணப்பட்டால் இவ்வாறானவர்கள் உடன் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தவறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாவும் அவர்கள் அறிவித்துள்ளனர்
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவான டெங்கு தொற்றியோர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு மட்டுமன்றி சிக்குன்யா, எலி காய்ச்சல், பறவைக் காய்ச்சல் உட்பட ஒரு வகை வைரஸ் காய்ச்சல் உடலரிப்பு தொண்டை அழற்சி, சளி, கண் நோய் ஆகியவற்றுக்கு ஆளாகியவர்களும் உள்ளனர்.