டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு; 23 உயிரிழப்புகள் பதிவு

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலால் இதுவரை 22 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்தியநிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

டெங்கு பரவல் தொடர்பில் நேற்று  செவ்வாய்க்கிழமை (28) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 41 ஆயிரத்து 324 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் இதுவரை 22 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

நுளம்பு பெருக்கத்தின் அதிகரிப்போடு 11 மாவட்டங்கள் தற்போது டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி, மட்டகக்களப்பு, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்கள் மேற்படி டெங்கு அபாயமுள்ள பகுதிகளாகும்.

பருவகால மலைவீழ்ச்சியை தொடர்ந்து 22 மாவட்டகளில் நுளம்பு பரவல் தீவிரமடைந்துள்ளது. தொடரும் மழையுடன் கூடிய காலநிலை நுளம்பு பரவலுக்கு சாதகமாக அமைந்துள்ளதுடன், ஏனைய நாட்களுடன் ஒப்பிடுகையில் இக்காலப்பகுதியில் டெங்கு நுளம்பினங்கள் துரிதமாக பரவி வருவதாக குடம்பியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் டெங்கு அபாயத்தைக் கருத்திற்கொண்டு சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.

மனிதர்கள் நடமாடும் மற்றும் வசிக்கும் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் அதிகளவில் பரவுகின்றன. அந்த வகையில் வீட்டு சூழல், வழிப்பாட்டுத் தளங்கள், பாடசாலை வளாகம், வர்த்தக நிலையங்கள், கைவிடப்பட்ட காணிகள், கட்டிட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களில் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நுளம்பு குடம்பிகள் தொடர்பில் அண்மையில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 650, 638 இடங்களை அதிகாரிகள் பரிசோதித்திருந்தனர்.

குறித்த சோதனையில் பாடசாலை சூழலிலேயே அதிக அளவில் டெங்கு நுளம்புகள் பரவியிருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளது. பாடசாலை சூழலை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். நிறைவடைந்த வாரத்திலிருந்து குறிப்பிடத்தக்களவில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பைக் காணக்கூடியதாக உள்ளது. இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த காய்ச்சல் மற்றும் தலைவலி, உடல் வலி, கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையை நாடுவது அவசியம் என்றார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த