‘டித்வா’ புயல் நிவாரண திட்டங்கள் ஆரம்பம்!

‘டித்வா’ புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், நட்டஈடு வழங்குதல் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்தல் என்பன ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (06) கண்டியில் நடைபெறவுள்ளது.

அதற்கமைய, ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட குண்டசாலை, மெததும்பர, பாததும்பர மற்றும் பன்வில பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கைத்தொழிலாளர்களுக்கும், முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்கும் நிகழ்வு நாளை முற்பகல் 9.00 மணிக்கு குண்டசாலை மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

‘டித்வா’ புயலினால் தமது கைத்தொழில் நிலையங்கள் அல்லது இயந்திர உபகரணங்கள் போன்றவற்றிற்குச் சேதம் ஏற்பட்ட நபர்களுக்கு, வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக நட்டஈட்டுத் தொகையாக 02 இலட்சம் ரூபா வீதம் இதன்போது வழங்கப்படவுள்ளது.

சிறிய, நடுத்தர அல்லது பாரிய அளவு என்ற பேதமின்றி பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வியாபாரங்களுக்கும் இந்த நிதியுதவி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய மேற்கொள்ளப்படுகிறது.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் முழுமையாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்குப் புதிய வீடொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்காக வழங்கப்படவுள்ள 50 இலட்சம் ரூபா தொகையில், முதற்கட்டமாக 20 இலட்சம் ரூபா காசோலைகளை வழங்குவதும் இதன்போது இடம்பெறும்.

தமக்குச் சொந்தமான காணியில் அல்லது அரசாங்கத்தினால் வழங்கப்படும் காணியில் வீட்டை நிர்மாணிக்கும் நபர்கள் இத்திட்டத்தினுள் உள்ளடக்கப்படுவர்.

‘டித்வா’ புயல் காரணமாக முழுமையாக வீடுகள் சேதமடைந்த மற்றும் மண்சரிவு உயர் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காகக் காணிகளை வழங்குதல் மற்றும் நட்டஈடு வழங்குதல் என்பன நாளை (06) பிற்பகல் நியங்கொட பாடசாலை மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளது.

அத்துடன், வீடுகள் பகுதியளவு சேதமடைந்த குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் நட்டஈட்டுத் தொகையை வழங்குவதும் இதன்போது இடம்பெறும். புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்குச் சமாந்தர ஒன்றாக, புதிய வீடொன்றின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

இதனிடையே, கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் (A-009) மஹய்யாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகளும் நாளை முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், நீண்ட காலமாக நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதும் இன்று முற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்