சென்னையில் கடந்த சில நாட்களாக, டிட்வா புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனை அகற்றும் பணி நடக்கிறது.
வங்க கடலில் உருவான, ‘டிட்வா’ புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில், வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பாக, வடசென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. மாதவரம், கொளத்துார், பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், கொடுங்கையூர், புழல் – செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள 27 சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீர் உடனடியாக மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.