பாடசாலை நேரத்தை நீடிப்பது தொடர்பில் எடுத்திருக்கும் தீர்மானத்தை மாற்றுவதற்கு எதிர்வரும் 7 ஆம் திகதிவரை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதாக தெரிவித்துள்ள ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி, அந்த காலத்துக்குள் மாற்றாவிடின், டிசம்பர் முதலாம் வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த கூட்டணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, அந்த கூட்டணியின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு முதல், பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.