மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இதனையடுத்து மீண்டும் அவருடைய டைரக்ஷனில் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக ‘தக் லைஃப்’ ரிலீசானது. கமல் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரியளவில் வரவேற்பினை பெறவில்லை. இதனையடுத்து மணிரத்னம் தன்னுடைய அடுத்த படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளை துவங்கவிட்டதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் இப்படம் உருவாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் பற்றி லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கமலின் ‘தக் லைஃப்’ பெரிதாக போகாத நிலையில், மணிரத்னம் தன்னுடைய அடுத்த படத்துக்காக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே செக்க சிவந்த வானமில் இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்திருந்தனர். ஆனால் இப்படம் மல்டி ஸ்டார் கதைக்களத்தில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதியை சிங்கிள் ஹீரோவாக வைத்து மணிரத்னம் தன்னுடைய அடுத்த படத்தினை இயக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.