ஜெப்ரி எப்ஸ்டீன் விருந்தில் லண்டன் பொலிஸ் பாதுகாப்பு வழங்கியது?

மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் 2010-ம் ஆண்டு நியூயார்க்கில் நடத்திய ஒரு இரவு விருந்திற்கு, லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கியதாகப் புதிய தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மன்னர் சார்லஸின் சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சருக்கு (முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ) பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த இந்த அதிகாரிகள், எப்ஸ்டீனின் வீட்டில் நடைபெற்ற அந்த விருந்தின் போது நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டதாக ‘தி சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ உள்ள மின்னஞ்சல் தரவுகள் மூலம் இந்தத் தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2010 டிசம்பரில், எப்ஸ்டீனின் நியூயார்க் இல்லத்தில் ஆண்ட்ரூ தங்கியிருந்தபோது, அவருடன் லண்டனில் இருந்து சென்ற இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் அங்கேயே தங்கியுள்ளனர்.

அந்த விருந்தின் போது, “பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் கதவிலேயே வழங்கப்பட்டுள்ளன” என எப்ஸ்டீனின் ஊழியர் ஒருவர் அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருப்பது தற்போது ஆதாரமாகச் சிக்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மெட்ரோபாலிட்டன் காவல்துறை தற்போது தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. கடந்த 2010-ம் காலகட்டத்தில் ஆண்ட்ரூவுடன் பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ள காவல்துறை, அந்தச் சமயத்தில் நடந்த ஏதேனும் முறைகேடுகள் குறித்துத் தகவல் தெரிந்தால் முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இருப்பினும், முதற்கட்ட விசாரணையில் அந்தப் பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக எந்தக் குற்றத்திலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவெளை கடந்த வாரம், அரசுப் பதவியைப் பயன்படுத்தி ரகசிய ஆவணங்களை எப்ஸ்டீனுக்குப் பகிர்ந்ததாகக் கூறப்படும் புகாரில் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டு, பின்னர் விசாரணைக்காக விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பிரித்தானிய போலீஸ் அதிகாரிகள், ஒரு பாலியல் குற்றவாளியின் வீட்டிற்குப் பாதுகாப்பு வழங்கியது பிரிட்டன் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த விவகாரம் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு மேலும் ஒரு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்