ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிரிழந்த உடனேயே எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்க அரசு வெளிட்டது!

ஜெஃப்ரி எப்ஸ்டீன் உயிரிழந்த உடனேயே எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதுவரை பார்த்திராத இந்தப் புகைப்படங்கள், அவரது உடல் ஒரு ஸ்ட்ரெச்சரில் இருப்பதையும், மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதையும் காட்டுகின்றன.

எப்ஸ்டீன் சிறையில் இருந்தபோது நிகழ்ந்த மரணம் குறித்த எஃப்.பி.ஐ விசாரணை அறிக்கையின் ஒரு பகுதியாக இருபது படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் பல படங்கள் பார்ப்பதற்கு ஏற்றதாக இல்லை. இதனுடன் பிரேதப் பரிசோதனை மற்றும் சிறையின் உள் ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் உள்ள மில்லியன் கணக்கான ஆவணங்களில் இந்தப் புகைப்படங்களும் அடங்கும்.

எப்ஸ்டீன் கடந்த 2019 ஆகஸ்ட் 10 அன்று அவரது சிறை அறையில் இறந்து கிடந்தார்.

பாலியல் தேவைகளுக்காக கடத்தல் மற்றும் சதித் திட்டக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு முன்னதாக, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் சீர்திருத்த மையத்தில் எப்ஸ்டீன் வைக்கப்பட்டிருந்தார்.

ஜெப்ரி எப்ஸ்டீன் உயிரிழந்த உடனேயே, அவரது உடல் ஒரு ஸ்ட்ரெச்சரில் கிடப்பதையும், மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதையும் காட்டும் இதுவரை பார்த்திராத புகைப்படங்களை அமெரிக்க அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

“ஜெப்ரி எப்ஸ்டீன் மரண விசாரணை” என்ற தலைப்பில் புதிதாக வெளியிடப்பட்ட இந்த எஃப்.பி.ஐ அறிக்கை, நியூயார்க்கில் உள்ள எஃப்.பி.ஐ ஏஜென்சியின் கள அலுவலகத்தால் நடத்தப்பட்ட விசாரணையாகத் தெரிகிறது.

இந்த 23 பக்க அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் “ரகசியமற்றது” என்ற முத்திரை இடப்பட்டுள்ளது.

பிபிசி வெரிஃபையால் பார்க்கப்பட்ட இந்த மறைக்கப்படாத ஆவணங்கள், எப்ஸ்டீனின் கழுத்து மற்றும் அதில் உள்ள காயங்களின் நெருக்கமான புகைப்படங்களைக் காட்டுகின்றன.

மேலும், இதில் எப்ஸ்டீனின் பிரேதப் பரிசோதனை விவரங்கள் மற்றும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாட்களில் அவரது மனநலம் குறித்த உளவியல் அறிக்கையும் இடம்பெற்றுள்ளன.

பல புகைப்படங்களில் எப்ஸ்டீன் ஒரு ஸ்ட்ரெச்சரில் படுத்த நிலையில் காணப்படுகிறார். அவரை மீண்டும் உயிர்ப்பிக்க மருத்துவர்கள் முயற்சி செய்யும் காட்சிகளும் அதில் உள்ளன.

இந்தப் படங்கள் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று, உள்ளூர் நேரப்படி காலை 06:49 மணிக்கு எடுக்கப்பட்டதாக தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் தனது சிறை அறையில் உணர்விழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து சுமார் 16 நிமிடங்கள் கழித்து இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

புகைப்படங்கள் எடுக்கப்பட்ட இடம் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் எப்ஸ்டீன் காலை 06:39 மணிக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இது, அந்தப் புகைப்படங்கள் அங்கே எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

மற்ற மூன்று புகைப்படங்களில் அவை மருத்துவமனையில் எடுக்கப்பட்டவை என்பதைக் குறிக்கும் குறிப்புகள் உள்ளன. அவை அவரது தலையின் நெருக்கமான காட்சியையும், கழுத்தில் உள்ள ஒரு காயத்தையும் காட்டுகின்றன.

ஒவ்வொரு புகைப்படத்திலும் எப்ஸ்டீனின் பெயர் உள்ளது, ஆனால் சில படங்களில் அவரது முதல் பெயர் Jeffrey என்பதற்குப் பதிலாக Jeffery எனத் தவறாக எழுதப்பட்டுள்ளது.

பாலியல் கடத்தல் மற்றும் சதித் திட்டக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு முன்னதாக, நியூயார்க்கில் உள்ள மெட்ரோபொலிட்டன் சீர்திருத்த மையத்தில் எப்ஸ்டீன் வைக்கப்பட்டிருந்தார்.பட மூலாதாரம்,Department of Justice
படக்குறிப்பு,எப்ஸ்டீன் கடந்த 2019 ஆகஸ்ட் 10 அன்று அவரது சிறை அறையில் இறந்து கிடந்தார்.
தன்னைக் கொல்ல முயற்சி என எப்ஸ்டீன் குற்றச்சாட்டு
எப்ஸ்டீனின் உடல் குறித்து சமீபத்தில் புதிதாக வெளியிடப்பட்ட புகைப்படங்களை பிபிசி வெரிஃபை ரிவர்ஸ் இமேஜ் முறையில் ஆய்வு செய்தபோது, ஜனவரி 30-ஆம் தேதிக்கு முன்பாக இணையத்தில் அவற்றின் முந்தைய பதிப்புகள் எதையும் கண்டறிய முடியவில்லை.

மேலும், அந்த புகைப்படங்களை உறுதிப்படுத்தும் பிற ஆவணங்களையும் அந்த கோப்புகளில் இருந்ததை கண்டுபிடித்தோம். அமெரிக்க நீதித்துறை மற்றும் நியூயார்க் தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகம் தாக்கல் செய்த 89 பக்க பிரதேச பரிசோதனை அறிக்கையும், அதே படங்களை (மறைக்கப்பட்ட) கொண்ட எஃப்.பி.ஐ. நியூயார்க் அலுவலகத்தின் மின்னஞ்சல்களும் அடங்கும்.

தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட எப்ஸ்டீன் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் சில பகுதிகளும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இதில் எப்ஸ்டீனின் கழுத்தில் உள்ள தைராய்டு குருத்தெலும்பில் ஏற்பட்ட இரண்டு முறிவுகளின் ஸ்கேன் நகல்களும் அடங்கும்.

2019ம் ஆண்டு 6ம் தேதி ஜூலை அன்று பாலியல் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது முதல் அவர் இறக்கும் வரை, நியூயார்க் மெட்ரோபொலிட்டன் திருத்த மையத்தில் எப்ஸ்டீன் வைக்கப்பட்டிருந்தது குறித்த ஆறு பக்க காலவரிசையை எஃப்.பி.ஐ அறிக்கை உள்ளடக்கியுள்ளது.

23 ஜூலை 2019 அன்று எப்ஸ்டீன் தற்கொலைக்கு முயன்ற பிறகு, அவர் தற்கொலை கண்காணிப்பில் வைக்கப்பட்டதை இது வெளிப்படுத்துகிறது. அந்த நேரத்தில், கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வந்த முன்னாள் போலீஸ் அதிகாரியும், அவரது சிறையில் தங்கியிருந்தவருமான நிக்கோலஸ் டார்டாக்லியோன் தன்னைக் கொல்ல முயன்றதாக எப்ஸ்டீன் குற்றம் சாட்டினார்.

இடதுபுறம் உள்ள படத்தில் மருத்துவப் பணியாளர்கள் எப்ஸ்டீனின் உடலுக்கு சிகிச்சை அளிப்பதைக் காண முடிகிறது. வலதுபுறம் உள்ள படத்தில் அவரது பெயர் மற்றும் இறந்த தேதியைக் காட்டும் அடையாள அட்டையுடன் கூடிய எப்ஸ்டீனின் கை காணப்படுகிறது.
மறுநாள் ஒரு உளவியலாளருடனான சந்திப்பில், எப்ஸ்டீன் தனக்கு “தற்கொலை செய்துகொள்வதில் ஆர்வம் இல்லை” என்றும், உயிரை மாய்த்துக் கொள்வது “பைத்தியக்காரத்தனமாக இருக்கும்” என்றும் கூறியதாக அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

ஜூலை 25 அன்று, “எனது வழக்கை எதிர்த்துப் போராடுவதில் நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன், எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது, நான் மீண்டும் என் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன்” என்று அவர் கூறியதாக உளவியலாளர் அறிக்கை தெரிவிக்கிறது.

நீதித்துறை வெளியிட்ட பிற ஆவணங்கள், எப்ஸ்டீனை தனியாக தங்க வைக்கக்கூடாது என்று சிறைக் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியதையும், அவரது சிறை அறையில் “30 நிமிடங்களுக்கு ஒருமுறை சோதனைகள்” மற்றும் “அறிவிக்கப்படாத கண்காணிப்புகள்” மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதையும் காட்டுகின்றன.

எப்ஸ்டீன் இறப்பதற்கு முந்தைய நாள் அவருடன் சிறையில் இருந்த நபர் விடுவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 9 அன்று இரவு, சிறைக்காவலர்கள் அதிகாலை 03:00 மற்றும் 05:00 மணிக்கு திட்டமிடப்பட்ட சோதனைகளைச் செய்யத் தவறிவிட்டனர் என்பதையும், அந்தப் பிரிவில் உள்ள கேமரா அமைப்பு செயலிழந்திருந்ததையும் சிறை ஆவணங்கள் காட்டுகின்றன.

சிறை ஊழியர்கள் மேற்கொண்ட காலை நேர சோதனையின் போது அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளின் ஒரு பகுதியாக, அதே எஃப்.பி.ஐ. அறிக்கையின் மறைக்கப்பட்ட இன்னொரு பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிப்பு 17 பக்கங்கள் மட்டுமே கொண்டது

இதில் உளவியலாளர் அறிக்கையும், எப்ஸ்டீன் காவலில் இருந்த காலவரிசையும் இடம்பெறவில்லை. மேலும், அந்த கோப்பில் உள்ள படங்களும் மறைக்கப்பட்டுள்ளன.

ஏன் மறைக்கப்பட்ட பதிப்பும், மறைக்கப்படாத பதிப்பும் இரண்டும் ஒரே நேரத்தில் இந்த கோப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக தெரியவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்க நீதித்துறையை தொடர்பு கொண்டுள்ளோம். எஃப்.பி.ஐ கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

நன்றி: பிபிசி

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை