‘இசை அசுரன்’ ஜீ .வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ இம்மாற்றல் ‘ எனும் திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ரவி மோகன் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ இம்மாற்றல் ‘ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கயாடு லோகர், டி எம் கார்த்திக் ,குமார் நடராஜன், மாறன், ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ கே ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இளம் தலைமுறை ரசிகர்களின் இல்த்திரனியல் சாதனங்களில் விருப்பத்திற்குரிய புகைப்படமாக அதிக அளவில் இடம் பிடித்திருக்கும் நடிகை கயாடு லோகர் கவர்ச்சியாக தோன்றுவதால் இந்த டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.