ஜப்பானில் எரிமலை அருகே சுற்றுலா பயணிகள் சென்ற ஹெலிகொப்டர் மாயம்

ஜப்பானின் கியூஷு தீவில் அமைந்துள்ள மௌண்ட் அசோ (Mount Aso) எரிமலைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10:52 மணியளவில் ‘அசோ கடலி டொமினியன்’ (Aso Cuddly Dominion) உயிரியல் பூங்காவிலிருந்து 10 நிமிடச் சுற்றுப்பயணத்திற்காக இந்த ஹெலிகொப்டர் புறப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

நேற்று மாலை 4 மணியளவில், மௌண்ட் அசோவின் ஐந்து சிகரங்களில் ஒன்றான நகடேக் (Nakadake) எரிமலைப் பள்ளத்தின் வடக்குப் பகுதியில் சிதைந்த நிலையில் ஹெலிகொப்டர் பாகம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் வரிசை எண்ணை (Serial Number) வைத்து அது காணாமல் போன ஹெலிகொப்டர் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எரிமலைப் பள்ளத்திலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் மற்றும் அப்பகுதியில் நிலவும் அடர்த்தியான மூடுபனி காரணமாக மீட்புக் குழுவினரால் விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாகச் செல்ல முடியவில்லை. இன்றையதினம் காலை மீண்டும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த ஹெலிகொப்டரில் மொத்தம் மூன்று பேர் பயணித்தனர். அதில், தாய்வான் நாட்டைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண்ணொருவரும், 36 வயதுடைய பெண்ணொருவரும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட 64 வயதுடைய ஜப்பானிய விமானி ஒருவரும் அடங்குவர்.

விபத்தின் போது ஒரு பயணியின் ஸ்மார்ட்போனில் உள்ள ‘மோதல் கண்டறியும்’ (Collision Detection) வசதி மூலம் தானாகவே அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற தினத்தில் முதல் இரண்டு பயணங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், மூன்றாவது பயணத்தின் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

2024-ஆம் ஆண்டிலும் இதே நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிகொப்டர் ஒன்று அவசர நிலையில் தரையிறக்கப்பட்ட போது மூன்று பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜப்பானிய தற்காப்புப் படையினர், பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய