ஜனாதிபதி தர்மசங்கடத்திற்கு உள்ளாகின்றார் – அசேல சம்பத் விசனம்

அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேனவின் வர்த்தக வளர்ச்சிக்குக் பின்னால் உள்ள அரசியல் சலுகைகள் மற்றும் துறைமுக அமைச்சரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

டட்லி சிறிசேன இன்று ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் பயணிக்கும் நிலைக்கு உயர்ந்ததன் பின்னணியில் சாதாரண மக்களின் வரிப்பணமும், அரச வங்கிகளின் சலுகைகளும் உள்ளன.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் முதல் அவரது சகோதரரின் ஜனாதிபதி காலம் வரை, அரச வங்கிகள் ஊடாக அவருக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான கடன் வசதிகள் மற்றும் சலுகைகள் எவை என்பதை நாங்கள் விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்.

ஒரு சாதாரண மனிதன் வங்கியில் கடன் பெற முடியாமல் தவிக்கும் நிலையில், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் பெற்ற வரப்பிரசாதங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மேலும் தற்போது ரமலான் நோன்பு காலம் ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்து வரும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியிலும் நுகர்வோர் பொருட்களின் தேவை அதிகரிக்கும்.

துறைமுகங்களில் கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதால் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டிய துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் அநுர குமார கருணாத்திலக்க, யாழ்ப்பாணத்திற்குச் சென்று கல்வி சீர்திருத்தங்கள் குறித்துப் பேசுவது வேடிக்கையானது. ஜனாதிபதி வழங்கிய பொறுப்பைச் செய்யாமல் தேவையற்ற விடயங்களில் அமைச்சர் தலையிடுவதை நிறுத்த வேண்டும்.

இறுதியாக, தமக்கு வழங்கப்பட்ட விடயதானங்களை விடுத்து வேறு பாதைகளில் அமைச்சர்கள் பயணிப்பதால் ஜனாதிபதியே தர்மசங்கடத்திற்கு உள்ளாகின்றார். மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண அரசாங்கமே உடனடியாக முன்வர வேண்டும் என்றார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்