ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்க்கருத்து கூறியுள்ள வலி. வடக்கு பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்!

மக்களின் காணி மக்களுக்கே சொந்தமானது என ஜனாதிபதி கூறிவரும் நிலையில் , இராணுவத்தினர் தமது தேவைக்காக காணிகளை கையகப்படுத்த வில்லை எனவும் , மக்களின் நலனுக்காவே காணிகளை கையகப்படுத்தி வருவதாக என வலி. வடக்கின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுரேகா  சபையில் தெரிவித்துள்ளார்.

கீரிமலை பகுதியில் கடற்படையினர் ரேடார் அமைக்க தனியாருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் , அதற்காக காணியை வழங்க முடியாது என வலி. வடக்கு பிரதேச சபையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற மாதாந்த அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.

அதனை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தெரிவிக்கையில்

தற்போது இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த தான் ரேடார் அமைக்கப்படுவதாக கூறினார்

அதற்கு தவிசாளர் , கீரிமலைக்கு தான் போதைப்பொருள் வருகிறதா என கேள்வி எழுப்பினார் ? அத்துடன் கீரிமலை பகுதியில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கடற்படையினர் தமது கண்காணிப்பு நிலையம் ஒன்றினை அமைக்க தனியார் காணியில் இரண்டு பரப்பினை கையகப்படுத்த முயற்சித்த வேளை மக்களின் எதிர்ப்பை அடுத்து , அந்த காணிகளை மக்களிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதிகளையும் மீள கையளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள போதிலும் , நகர அபிவிருத்தி அதிகார சபை அதனை இன்னமும் பொறுப்பெடுக்காத நிலையிலையே அது இப்பவும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை நகர அபிவிருத்தி அதிகார சபையினர் பொறுப்பெடுத்தால் , ஜனாதிபதி மாளிகையும் அதனை சூழவுள்ள காணிகளும் விடுவிக்கப்படும். என தெரிவித்தார்.

அதற்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் , அது இராணுவத்தின் தேவைக்காக சுவீகரிக்கப்படவில்லை , மக்களின் நலனுக்காகவே மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகிறது. இதே போன்று தான் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கும் காணி சுவீகரிக்கப்படுகிறது என கூறினார்.

அதற்கும் தவிசாளர் , விமான நிலையத்திற்கு தேவையான காணிகளை சுவீகரிக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதற்கு மேலதிகமான காணிகளை சுவீகரிக்கவே எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் .

வல்லை – அராலி வீதி கூட விமான நிலையத்தை காரணம் காட்டி மூடி வைத்துள்ளார்கள். ஆனால் அந்த வீதிக்கு விமான நிலையத்த்திற்கும் இடையில் எவ்வளவோ இடைவெளிகள் உள்ளன. அந்த பகுதிகள் இன்று வெறும் பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன. இவை பாதுகாப்பு காரணம் என கூறி அடாத்தாக சுவீகரிக்கப்படும் மக்கள் காணிகள். அவற்றினை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது என கூறியதுடன் , விமான நிலையத்திற்கு எவ்வளவு காணி தேவை ?  அதன் ஓடுபாதையின் நீளம் எவ்வளவு ? எவ்வளவு காணியை சுவீகரித்து வைத்துள்ளார்கள் ? என தவிசாளர் உறுப்பினரிடம் கேட்ட போது, அது பற்றி தெரியாது. ஆனால் மக்களின் நலனுக்காகவே காணிகள் சுவீகரிக்கப்படுகிறது. இராணுவத்தின் தேவைக்காக இல்லை என மீண்டும் பதில் அளித்தார். அத்துடன் சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு எமது அரசாங்கம் நஷ்ட ஈடுகளை வழங்கும் எனவும் உறுப்பினர் கூறினார்.

அதற்கு தவிசாளர் 1980ஆம் ஆண்டு கால பகுதியில் துறைமுக அபிவிருத்திக்கு என சுவீகரிக்கப்பட்ட மக்களின் காணிகளுக்கே இன்னமும் நஷ்ட ஈடுகள் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது காணிகளை சுவீகரித்து நஷ்ட ஈடு வழங்குவோம் என்ற கதைகளை நாங்கள் நம்ப தயார் இல்லை. எனவே மக்களின் காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது என திடமாக கூறினார்.

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

pla

நிறுத்தப்பட்டிருந்த மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்று

ai

ஆந்திர மாநிலத்தில் AI வழங்கிய போலி தீர்ப்புகள்?

March 4, 2026

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொத்துத் தகராறு வழக்கு ஒன்று விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்தச் சொத்தை ஆய்வு செய்ய

d

மோசடி வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் சுற்றிவளைப்பு

March 4, 2026

ஜப்பான் மொழிக் கற்கை நிலையமொன்றை நடத்துவதாகக் கூறி, ஜப்பானின் கட்டுமானத் துறை, ஹோட்டல் துறை மற்றும் சாரதிப் பணிகளுக்காக ஆட்களை

kottaga

8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம்

March 4, 2026

யுலிபீல்ட் தோட்டத் தொகுதிக்குட்பட்ட யதன்பிரிவு தோட்ட மக்கள், 08 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியின்

zelen

மத்திய கிழக்குப் போர்; ஏவுகணைகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் – உக்ரைன் ஜனாதிபதி

March 4, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளைக் கண்டறிவது கடினமாகலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

Vasantha Athukorala

ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு – பேராசிரியர் வசந்த அத்துகோரள

March 4, 2026

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி வருமானத்தில் 8 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின்

Nalin

ஊடக வல்லுநர் நிறுவனச் சட்ட வரைவு உருவாக்கம் – சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

March 4, 2026

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை கொடுப்பனவுகளை விரைவாகச் செலுத்துமாறு , அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அனைத்து ஊடக

Sl E

சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறே எந்தவொரு சட்டமும் இலங்கையில் அமையவேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

March 4, 2026

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு