“ஜனநாயகன்” இசை வெளியீட்டு விழா ஆரம்பம்

நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையின் கடைசி திரைப்படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ள குதிந்த ரசிகர்களால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதன் ஆடியோ லாஞ்ச் இன்று மலேசியாவின் புகழ்பெற்ற புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது.

80 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானத்திற்கான டிக்கெட்டுகள் சில தினங்களுக்கு முன்பே விற்றுத் தீர்ந்ததாக தகவல்கள் வந்தது.

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள மலேசியாவின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் குவிந்ததால், மைதானத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகள் முழுவதும் டிராபிக்கால் ஸ்தம்பித்தன. சில இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் மாற்றுப் பாதைகளை ஏற்படுத்தி நிலைமையை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விழா தொடங்குவதற்கு முன்பாக, மைதானத்திற்குள் நுழைவதில் தாமதம் ஏற்பட்டதால், சில ரசிகர்கள் இடையே சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு நிலைமையை சீர்படுத்தினர். இதனால் விழா எந்த பெரிய பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெற்றது.

தமிழ்நாட்டில் விஜய் பட வெளியீடுகளைப் போலவே, மலேசியாவிலும் ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க, விஜய் கட்-அவுட்களுக்கு பாலபிஷேகம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சில ரசிகர்கள் விஜய்யின் வசனங்களை முழக்கமிட்டு கோஷங்கள் எழுப்பியதால், மைதானம் முழுவதும் திருவிழா சூழல் நிலவியது.

இந்த விழாவில், விஜய்யின் பெண் ரசிகைகளும் அதிக அளவில் கலந்துகொண்டனர். ‘ஜனநாயகன்’ மற்றும் ‘தளபதி’ என்ற பெயர் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களை அணிந்து, விஜய்யின் புகைப்படங்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புக்கிட் ஜலீல் மைதானத்தின் நுழைவுவாயிலில், கிரேன் உதவியுடன் வைக்கபட்ட மிகப் பெரிய ஜனநாயகன் பட பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த பேனருக்கு முன்பு ரசிகர்கள் கூட்டம் திரண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, வெறும் ஆடியோ லாஞ்சாக மட்டுமல்லாமல், ‘தளபதி திருவிழா’ என்ற பெயரில் ஒரு முழுமையான இசை நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. இதில், விஜய்யின் பழைய சூப்பர் ஹிட் பாடல்களை, அந்தப் பாடல்களை பாடிய அசல் பாடகர்களே மேடையில் பாடுவது ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

விழாவில் நடந்த ஒவ்வொரு தருணமும் சமூக வலைதளங்களில் நேரடியாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்களின் கொண்டாட்டம், கூட்ட நெரிசல், மேடை அலங்காரம் உள்ளிட்டவை இணையத்தில் வைரலாகி, ‘ஜனநாயகன்’ மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு