ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோற்றது.
செல்டா விகோ சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் வில்லியொட் ஸ்வெட்பேர்க் பெற்றிருந்தார்.
இதேவேளை வலென்சியாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், செவிய்யாவுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. வலென்சியா சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹியூகோ டுரோ பெற்றதோடு, செவிய்யா சார்பாகப் பெறப்பட்ட கோலானது ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.