செர்னோபில் அணு உலை பாதுகாப்பு கவசத்துக்கு சேதம்?

சேதமுற்ற செர்னோபில் அணு உலையில் இருந்து கதிர் வீச்சு வெளியேறுவதை தடுக்கும் பாதுகாப்பு கவசம், ரஷ்யா- உக்ரைன் போரில் சேதம் அடைந்துள்ளது.

உக்ரைன் நாட்டில் அமைந்துள்ள செர்னோபில் அணு உலையில் 1986ம் ஆண்டு வெடி விபத்து ஏற்பட்டது. கதிர் வீச்சு வெளியாகி ஏராளமானோர் உயிரிழந்தனர். அந்த பகுதியே மனிதர்கள் வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளது.

இரும்புத்திரை நாடாக இருந்த சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இதனால், அணு உலை வெடி விபத்து பற்றிய முழுமையான விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. சோவியத் யூனியன் பிரிந்து, ரஷ்யாவும், உக்ரைனும் தனித்தனி நாடுகள் ஆன நிலையில் தான் முழுமையான பாதிப்புகள் தெரியவந்தன.

இதையடுத்து, சர்வதேச நாடுகளின் முயற்சியில், சேதமுற்ற அணு உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறுவதை தடுக்கும் முயற்சிகள் தொடங்கின. சர்வதேச நாடுகள், தன்னார்வ அமைப்புகள் என 45 நன்கொடையாளர்கள் மூலம் திரட்டப்பட்ட 22 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில், அணு உலையை சுற்றிலும் கவச அமைப்பு நிறுவப்பட்டது.

வேறு ஒரு இடத்தில் கவச அமைப்பை நிறுவி, அதை நகர்த்திச்சென்று அணு உலையை மூடி, கதிர் வீச்சு வெளியில் வராமல் செய்தனர். இது, உலகின் மிகப்பெரிய நகரும் கட்டுமானம் என்று வர்ணிக்கப்பட்ட கவச அமைப்பாகும்.

100 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் வகையில், இந்த அதிநவீன தொழில்நுட்ப கவச அமைப்பு நிறுவப்பட்டது. இதற்கான பணிகள், 2010 முதல் 2019ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம், வெடித்துச் சிதறிய அணு உலையில் இருந்து தொடர்ந்து கதிர்வீச்சு வெளியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டது.எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக சுற்று வட்டார பகுதிகளில் யாரும் வசிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் உக்கிரமாக நடந்து வருகிறது. இதில், ஒரு தரப்பினர் நடத்திய தாக்குதலில், அணு உலையின் பாதுகாப்பு கவசம் சேதம் அடைந்துள்ளது. சர்வதேச அணு சக்தி முகமை வல்லுநர் குழுவினர் நடத்திய ஆய்வில், பாதுகாப்பு கவசத்தின் கதிர் வீச்சு தடுக்கும் திறனுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக, கண்டறிந்துள்ளனர்.

கவச அமைப்பின் கூரையின் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் கதிர் வீச்சு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, முழுமையான மறு சீரமைப்பு பணி அவசியம் என்று சர்வதேச அணு சக்தி முகமை தெரிவித்துள்ளது.

அணு உலையின் பாதுகாப்பு கவசம் சேதம் அடைந்துள்ளதற்கு ரஷ்யா நடத்திய தாக்குதலே காரணம் என்று உக்ரைன் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

chinm

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு விளைவிக்கிறார் சின்மயி!

December 8, 2025

ஒரு படத்தில் பாடிவிட்டு அந்தப் படத்தின் வியாபாரத்தில் இடையூறு செய்வது போல் நடந்து கொண்ட பாடகி சின்மயி, அதற்காக மன்னிப்பு

chira

சிரஞ்சீவி – நயன்தாரா இணைவு

December 8, 2025

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள புதிய படத்தில் இருந்து சசிரேகா எனும் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது. நடிகர் சிரஞ்சீவியின்

chami_1

பெண் விமானியின் கோரிக்கை; தந்தை வழித்தன்மையை உறுதிப்படுத்த கிரிக்கெட் வீரர் மறுப்பு

December 8, 2025

தனது குழந்தையின் தந்தைவழித்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ அறிக்கையைப் பெற நீதிமன்ற உத்தரவைக் கோரிய பெண் விமானியின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர்

nori

பிரித்தானியாவின் நொரிஸ் முதற் தடவையாக சம்பியனானார்

December 8, 2025

முதற் தடவையாக மக்லரன் அணியின் லான்டோ நொரிஸ் போர்மியுலா வண் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அபு தாபி குரான்

sel

செல்டா விகோவிடம் தோற்ற றியல் மட்ரிட்

December 8, 2025

ஸ்பானிய லா லிகா தொடரில், தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற செல்டா விகோவுடனான போட்டியில் 0-2 என்ற

chi

மனித நுகர்வுக்கு பொருந்தாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்

December 8, 2025

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல

water fal

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன?

December 8, 2025

நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு

nuw

டித்வா சூறாவளியால் விவசாயத் துறைச் சேதம்; ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு

December 8, 2025

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர

kalv

கால்வாய்களை சீரமைக்கும் பணி

December 8, 2025

‘திட்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, சேதமடைந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவந்து, வயல்கள்

ditv

மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய

dama

பாதகமான வானிலை; சேதமடைந்த இணைப்புகளை சேதப்படுத்த வேண்டாம்

December 8, 2025

தற்போதைய பாதகமான வானிலை காரணமாக பல பகுதிகளில் சேதமடைந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு டயலொக் ஆக்சியாட்டா, பொலிஸ்

nivara

நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்

December 8, 2025

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு