சூறாவளி முல்லைத்தீவிலிருந்து 600 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது!

மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

“மொன்தா” சூறாவளியானது இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு மேலாக முல்லைத்தீவில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருப்பதை இன்று காலை 2.30 மணியளவில் அவதானிக்கப்பட்டது.

இது மேலும் தீவிரமடைந்து பலமிக்க சூறாவளியாக வடக்கு – வடமேற்குத் திசையை அண்மித்து நகர்ந்து செல்வதுடன் இன்று மாலை அல்லது இரவு வேளையில் ஆந்திரப் பிரதேசத்தின் கரையை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.

சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 65 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது