சுவிஸ் பேர்ன் பல்சமய இல்லம் தொடர்பாக மன்னார் ஆயருடன் கலந்துரையாடல்

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ன் நகரில் உள்ள “பல்சமய இல்லம்” (Haus der Religionen) உலகின் பல்வேறு மதங்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கும் புதுமையான கட்டிடமாக கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக பண்பாட்டு இணக்கத்திற்கும் மதங்களிடைய உரையாடலுக்கும் முக்கிய தளமாக திகழ்கின்றது.

பேர்ன் நகரின் வடபகுதியிலிருந்து தெற்கே செல்லும் பயணிகளுக்குக் கண்ணில் பட்டுவிடக்கூடிய இந்த கட்டிடம், ஐரோப்பாவில் கூட அரிதாகக் காணப்படும் தனித்துவத்தை உடையது.

இந்த ஒரே கட்டிடத்தில் கருவறையில் தமிழ் வழிபாடு நடைபெறும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில், இசுலாமியப் பள்ளிவாசல், தேவாலயம், குர்திஷ்-அலெவிட் நடுவம், ஆறு வகையான புத்தமத வழிகளை இணைக்கும் நடுவம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.

அதோடு யூத மதம், சிக் மதம் மற்றும் பஹாய் மதத்திற்கான சாளரங்களும் இங்கு உள்ளன. மக்கள் சந்திப்பு, உரையாடல் மற்றும் திருவிழாக்களுக்கு பொதுத் திடலும் உண்டு.

“பல்சமய இரவு” போன்ற நிகழ்வுகளின் போது இரண்டு முதல் மூன்று ஆயிரம் பேர் வரை இங்கு கூடுகின்றனர். இப் பல்சமய இல்லம் 14 டிசம்பர் 2014 அன்று திறந்து வைக்கப்பட்டது. அப்போது ஊடகங்கள் இதை “பேர்ன் நகரத்தின் புதுமை”, “புதிய காலக்கட்டத்தின் தொடக்கம்”, “மத அரசியலில் ஒரு புரட்சி” என உரைத்திருந்தன.

இப் பல்சய இல்லத்தின் உருவாக்கத்திற்கு பல முன்னோடியான முயற்சிகள் காரணமாகின. 1740 முதல் பேர்னில் இருந்த ஹேறென்கூற்ரெர் (Herrnhuter Gemeinde)“ சகோதரர் சமூகத்தினர் 1998 ஆம் ஆண்டு புதிய சமூகப் பணிக்கான நோக்கத்தைக் குறித்து சிந்தித்தனர்.

மதங்களுக்கு இடையிலான உரையாடல், குடியேற்றம் மற்றும் அமைதி பணிகள் முக்கிய கருப்பொருள்களாகத் தோன்றின.

17ஆம் நூற்றாண்டு செக் சிந்தனையாளர் யோஹான் அமோஸ் கோமேனியஸின் “அமைதிக்கான பணிகள்” என்ற கருத்து இங்கு வழிகாட்டியாக இருந்தது. அதே சமயம் 1990களின் தொடக்கத்தில் நடைபெற்ற வளைகுடா போர்களுக்குப் பிறகு பேர்னில் “மதங்களின் வட்டமேசை” உருவானது. இது பல மதத்தினரும் ஒன்றாக சந்தித்து உரையாட ஒரு தளமாக இருந்தது.

மேலும், பேர்ன் நகரத் திட்டமிடல் அலுவலகத்தின் ஆய்வில், குடியேற்ற மக்களால் வளர்ந்த ப்யூம்ப்லிஸ் பகுதியின் சமூக மாற்றங்கள் கவனிக்கப்பட்டன.

கலைக்கல்லூரி விரிவுரையாளர் கிறிஸ்தியன் ஜாக்குவெட், “பல்லினப் பல்பண்பாடுகளும் மதங்களும் ஒன்றிணையும் ஒரு இல்லம்” அந்தப் பகுதியின் முக்கியத்துவத்தை உயர்த்தும் என பரிந்துரைத்தார். இந்த மூன்று முயற்சிகளும் 2000ஆம் ஆண்டு நவம்பரில் ஒன்றிணைந்து “பல்சமய இல்லம்” என்ற யோசனையை முன்னெடுக்கத் தொடங்கின.

2002ஆம் ஆண்டு “Haus der Religionen – Dialog der Kulturen ” என்ற பல்சமய இல்லம் உருவானது. எட்டு உலக மதங்களைச் சேர்ந்தவர்கள் இதில் செயல்பட்டனர்.

அவர்கள் பல்வேறு பண்பாட்டு மற்றும் கல்வி நிகழ்ச்சிகளை 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இங்கு சை ஆயுர்வேத உணவகம் அமைந்துள்ளது. இதனை பல்சமய இல்லத்திற்காக ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்களில் ஒருவரான சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் நடாத்தி வருகின்றார்.

இன்றைய உலகில் எந்த நகரமும் தனித்தனியாக வாழ முடியாது. பண்பாட்டு, பமய பல்வகைமை பாடசாலைகள், மருத்துவமனைகள், இறுதி சடங்கு நடுவங்கள் என அனைத்து துறைகளிலும் உரையாடல் தேவையாக அமைகின்றது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்