இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எட்டியாந்தோட்டை, ஹக்பெல்லாவக்க பகுதியில் வைத்து மின் கம்பத்துடன் மோதி வீதியை விட்டு விலகி அங்கிருந்த வீடொன்றின் மீது கவிழ்ந்துள்ளது. இதில் குறித்த வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்த மூன்று சிறுவர்கள் சிகிச்சைக்காக கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.