நாட்டின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கான இருதரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கடன் நிதியானது சுகாதார சேவை வழங்கலின் செயற்திறனை மேம்படுத்துவதற்கு ஏதுவான தேசிய செயற்திட்ட உருவாக்கம் மற்றும் தரமான சுகாதார சேவையில் சகலரும் உள்வாங்கப்படுவதை உறுதிப்படுத்தல் என்பவற்றுக்குப் பயன்படுத்தப்படும் என நிதியமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு தொற்றுநோய்ப்பரவல் தடுப்பு, முற்கூட்டிய தயார்ப்படுத்தல் மற்றும் தொற்றுநோய்ப்பரவலின் பின்னரான துலங்கல் என்பவற்றுக்கான நடவடிக்கைகளும் இக்கடன் நிதியின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டள்ளது.