சீரற்ற வானிலை; உயிரிழப்பு அதிகரிப்பு

 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நிலவும் கடும் மழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், வீதிகளில் பாறைகள் விழுந்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

இந்நிலையில், 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்பபடி, கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி, பதுளை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

வளிமண்டல தளம்பல் நிலையினால் நாடு முழுவதிலும் பல நாட்களாக மழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் கடும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாகொடை பகுதி வழியாக வீசிய பலத்த காற்றினால் மாபலகம – காலி பிரதான வீதியில் மரங்கள் மின் கம்பிகளில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் கடும் மழையினால் தெனியாய நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு போக்குவரத்தை வழங்க பாதுகாப்புப் படையினர் உதவியுள்ளனர்.

உருபொக்கவின் பத்தன்வல பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மாத்தறை – கொட்டபல வீதி முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

100 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட நிவாரண சேவைகள் மையத்தின்தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று சனிக்கிழமை (22) இரவு உருபோகு ஓயா பெருக்கெடுத்தமையினால் கட்டுவன நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால், களுத்துறை, புலத்சிங்களவில் உள்ள பல தாழ்வான பகுதிகள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 80 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.