பல முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட சீனா ஓபன் டென்னிஸ் தொடர் பீஜிங்கில் நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவா, செக் குடியரசின் லின்டா நோஸ்கோவாவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியின் முதல் செட்டை 6-0 என்ற புள்ளிக்கணக்கில் அமன்டா அனிசிமோவாவும், 2வது செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் லின்டா நோஸ்கோவாவைவும் கைப்பற்றினர். இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது.
இதில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய அமன்டா அனிசிமோவா 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார்.