சி.ஐ.டி.க்கு மாறுகிறது அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு வழக்கு!

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணை நேற்று(12.03.2026) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் சார்பாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் 06க்கும் மேற்பட்டோர் மன்றில் முன்னியாகி, சிறுவனின் கொலை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என மன்றில் சுட்டிக்காட்டி, வழக்கு விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க வேண்டும் என மன்றில் சமர்ப்பணங்களை முன் வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு பொலிஸ் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. அதனால் கடுமையான வாத பிரதிவாதங்களை அடுத்து விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு மன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள சட்டத்தரணிகள் என 20க்கும் மேற்பட்டோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது ஒன்றினை மீட்டதாக பொலிஸார் மன்றில் தெரிவித்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று தடயவியல் பொலிஸாரினால் மீட்கப்படாத துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது சந்தேகத்திற்கு உரியது என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனையை மன்றில் முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சம்பவம் நடைபெற்று ஒரு மாத கால பகுதி கடந்தும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

is

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானில் 1,444 பேர் பலி

March 13, 2026

கடந்த 28ஆம் திகதி முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் 1,444 பேர் உயிரிழந்தனர். ஈரான்

ru

இலங்கைக்கான எரிபொருளை ரஷ்யாவிடம் இருந்து பெற அவசர சந்திப்பு

March 13, 2026

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை

poo

இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையில்…

March 13, 2026

நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

rani

இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டும்!

March 13, 2026

மத்திய கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள போர் மோதல்கள் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்களைக் குறைப்பதற்கு, இந்தியப் பெருங்கடல் பிராந்திய

us

அமெரிக்க இராணுவ விமானம் வீழ்த்தப்பட்டது: நால்வர் பலி

March 13, 2026

ஈராக்கிற்குள் வீழ்ந்து நொருங்கிய அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ‘Boeing KC-135 Stratotanker’ ரக விமானத்தில் இருந்த பணியாளர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக

Sathe

மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன்

March 13, 2026

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13)

c

பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நியாயமான தீர்வை வழங்குவார் – மின்சார தொழிற்சங்கங்கள்

March 13, 2026

தொழிற்சங்கத்தினர் இன்று (13) நண்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதுடன், அந்தப் பேச்சுவார்த்தைகள்

dammika ranathunga

ஊழல் குற்றச்சாட்டு; பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

March 13, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவிற்கு, அழைப்பாணை (Notice) கிடைக்கப்பெறும்

kan

இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை; சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராய்கிறோம் – கனிமொழி

March 13, 2026

சிறிமா – சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் ‘இந்திய வம்சாவளி தமிழர்கள்’ என்ற பதத்துக்கு மேலதிகமாக ‘இலங்கைத் தமிழர்கள்’ எனும் பதத்தையும் உள்வாங்குவதன்

chand

கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிகப் பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலை – அமைச்சர் சந்தன அபேரத்ன

March 13, 2026

சர்வதேச தரவுகளின்படி கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு அதிகப் பங்களிப்புச் செய்யும் நாடுகளில் ஒன்றாக இலங்கை மாறியிருப்பது கவலைக்குரியது. ‘செழிப்பான நாடு

For em

வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட அறிவிப்பு

March 13, 2026

இந்த ஆண்டின் முதல் 2 மாத காலப்பகுதியில், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவடிக்கைகளுக்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம்

arr

போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

March 13, 2026

தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹேஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று