‘பராசக்தி’ படக்குழு வெளியிட்டுள்ள மரண மாஸ் அறிவிப்பு.. மிரட்டலான சம்பவத்துக்கு ரெடி
எஸ்கே நடிப்பில் சமீபத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ ரிலீசானது. இதனையடுத்து சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், ‘பராசக்தி’ அப்டேட் குறித்து அறிவிப்பு ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயனின் 25வது படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கி வரும் இந்தப் படத்துக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் ‘பராசக்தி’ ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்தின் அடுத்ததடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இப்படம் குறித்தான அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகி எஸ்கே ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
எஸ்கே நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது சிறப்பு என்னவென்றால் இப்படம் அவருக்கு 100வது படமாகும். இதனால் ‘சூரரைப் போற்று’ ஒரு தரமான ஆல்பத்தை ஜிவி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் ‘பராசக்தி’ படத்துடைய முதல் பாடலை இந்த வாரம் வெளியிட உள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டு இருந்தார்.