சிவகார்த்திகேயனின் 25வது படமாக கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது ‘பராசக்தி’. கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும், பல விவாதங்களை இப்படம் கிளப்பியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அமரன், மதராஸியை தொடர்ந்து ‘பராசக்தி’ படமும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இப்படத்தின் வசூல் சில நாட்களாக குறைந்த நிலையில், பொங்கல் விடுமுறை ஆரம்பித்ததில் இருந்து மீண்டும் அதிகரிக்க துவங்கியது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில் ‘பராசக்தி’ படம் படைத்துள்ள சாதனை ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9 ஆம் தேதி ‘பராசக்தி’ திரையரங்குகளில் வெளியான நிலையில், பிரம்மாண்ட ஓபனிங் கிடைத்தது. இதனையடுத்து அடுத்தடுத்த நாட்களில் திட்டமிட்டு இந்த படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி நேற்றும், அதற்கு முந்தைய தினமும் படத்தின் வசூல் மீண்டும் பாசிட்டிவ் பக்கம் திரும்பியது.
அதாவது, இந்த டிக்கெட் புக்கிங் தளத்தில் இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான ‘பராசக்தி’ டிக்கெட்டுகள் விற்று தீர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயனின் அமரன், மதராஸி படங்கள் இதுபோன்று 1 மில்லியன் டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் விற்கப்பட்டு சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் ‘பராசக்தி’ மூலமாக இந்த சாதனையை எஸ்கே மீண்டும் தக்க வைத்துள்ளார். பல விதமான நெகட்டிவ் பிரச்சாரங்களுக்கு மத்தியில் இப்படத்தின் டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் விற்கப்பட்டு இருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இடையில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை ‘பராசக்தி’ வெளியான நிலையில் முதல் நாளில் ரூ. 27 கோடி வசூலை குவித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இரண்டே நாட்களில் ரூ. 51 கலெக்ஷனை அள்ளியிருந்தது.