போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போதைப்பொருள் பொதிகளை அடையாளம் காணப் பயன்படுத்தும் குறியீட்டு ஸ்டிக்கர்களை உருவாக்கும் கல்கிசையில் உள்ள இடமொன்றை பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் சுற்றிவளைத்துள்ளது.
இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தில் இருந்து பல குறியீட்டு ஸ்டிக்கர்கள் அடங்கிய தொகுதியை கண்டுபிடித்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் கல்கிசை மற்றும் படோவிட்ட பகுதியில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர் தொகுதியும் அவற்றில் அடங்கும்.
வெளிநாடுகளில் உள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி, இந்த ஸ்டிக்கர்கள் அச்சிடப்படுகின்றன.
கடந்த 9 ஆம் திகதி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குழுவினரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போதே இந்த இடம் குறித்த தகவல்கள் வெளியானது.