சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

​இந்தப் பேரணி, அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நுகேகொடை ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த “எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி…

​அரசின் மீது நம்பிக்கை; எதிர்ப்பாளர்களுக்குக் கண்டனம்

​”அரசாங்கம் தற்போது ஒரு சிறப்பான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. நாட்டில் தற்போது ஆட்கடத்தல்கள் இல்லை.”

​”அரசாங்கம் நல்ல பணிகளைச் செய்து வரும் நிலையில், நவம்பர் 21ஆம் திகதி நடத்தப்படும் பேரணிகள் மூலம் இந்தக் கட்டுமானங்களை உடைத்தெறியவோ, சீர்குலைக்கவோ இடமளிக்க முடியாது.”

​”எனவே, 21ஆம் திகதி ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நாங்களும் மக்களைக் கொழும்பிற்குக் கூட்டி வருகிறோம். மக்களைத் திரட்டி, அரசாங்கத்திற்கான ஆதரவை உரக்க உரைப்போம்… ‘நடிக்க வருபவர்கள் வர வேண்டாம்’ என்று நாங்கள் திட்டவட்டமாகக் கூறுகிறோம்.”

தொடர்ந்தும் அவர் பட்ஜெட் வாக்கெடுப்பு குறித்த அரசியல் விமர்சனங்கள் மற்றும்
​வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவிக்கையில் ​”இராதாக்களும் திகாம்பரங்களும் ‘அடி வாங்க நேரிடும்’ என்ற பயத்தினால் தான் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.” ​”மனோ கணேசன் போன்ற தலைவர்களுக்கும், திகாம்பரம் போன்றோருக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.”

எதிர்க்கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை எதிர்ப்பதற்குக் காரணம் அவர்களின் ‘குறுகிய மனப்பான்மையும் பொறாமையும் தான் என்று அவர் சாடினார்.

“சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும். அவர் அப்பதவிக்குத் தகுதியற்றவர்,” என்றும் கருணாநிதி வலியுறுத்தினார்.

​அதேபோல, “நாமல் ராஜபக்ஷவின் கனவு அடுத்த ஜனாதிபதியாவது தான். அது நடந்தால், நாட்டில் உள்ள நாங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்,” என்றும் அவர் தனது ஆழமான கவலையை வெளிப்படுத்தினார்.

By C.G.Prashanthan

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்