சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதைத் தடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு

‘சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதைத் தடுக்க, உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்’ என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: சென்னை மாநகர சாலை சிக்னல்கள் முன், குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுக்கின்றனர்.

பிச்சை எடுக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எந்த உருவ ஒற்றுமையும் இல்லை. பிச்சை எடுக்க பயன்படுத்தும் கைக்குழந்தைகள், எந்நேரமும் துாங்கிக் கொண்டிருக்கின்றன; இது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வெயில், வாகன சத்தத்துக்கு கூட, அந்த குழந்தைகள் கண் விழிப்பது இல்லை. அதனால் குழந்தைகளுக்கு துாக்க மாத்திரை கொடுக்கப்பட்டு இருக்கிறதா; வேறு மருந்து அல்லது ஆல்கஹால் கொடுக்கப்பட்டு இருக்கிறதா என, கண்டறிய வேண்டும்.

பிச்சை எடுக்கும் பெண்கள் பெரும்பாலும் தமிழில் பேசுவதில்லை. குழந்தைகளை வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்து பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகின்றனரா; பின்னணியில் செயல்படுவோர் யார் என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதுதொடர்பாக, ஆக., 8ல் அளித்த மனுவை பரிசீலித்து, குழந்தைகளை மீட்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எம்.செந்தில்குமார், எம்.காமேஷ் ஆஜராகி, ‘சாலைகளில் குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்கள், உண்மையிலேயே அந்த குழந்தைகளின் தாய்கள் தானா என்பதை கண்டறிய, மரபணு பரிசோதனை நடத்த வேண்டும்’ என்றனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘இந்த 21ம் நுாற்றாண்டிலும் இதுபோன்ற நிலை நீடிக்கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட துறைகள் ஒன்றிணைந்து, தீர்வு காண வேண்டும். இதுபோன்ற செயல்களை தடுக்க, உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்’ என, தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும், 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

hind

தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்

December 6, 2025

தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து, தமிழகம் முழுதும் நாளை(டிச.,7) போராட்டம் நடத்த உள்ளதாக, ஹிந்து முன்னணி மாநில தலைவர்

isro

நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை, வரும் 2040ல் இந்தியா செய்து முடிக்கும்!

December 6, 2025

“நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை, வரும் 2040ல் இந்தியா செய்து முடிக்கும்,” என, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின்

pi

சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதைத் தடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு

December 6, 2025

‘சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதைத் தடுக்க, உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்’ என, தமிழக அரசுக்கு, சென்னை உயர்

amb

அம்பேத்கர் நினைவு தினம் அனுஷ்டிப்பு

December 6, 2025

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, பார்லியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்,

anu

மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில் ஒருங்கிணைந்த பொறிமுறை தேவை – ஜனாதிபதி

December 6, 2025

ஒரு அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில், சாதாரண அரசு இயந்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை தேவை என்று

nat

2,000 மலைகளில் அறிவியல் ஆய்வு

December 6, 2025

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மத்திய சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள கிட்டத்தட்ட 2,000 மலைகளில் விரிவான அறிவியல்

jai

யாழ்ப்பாணத்தில் சைக்கிள் திருட்டில் நால்வர் கைது

December 6, 2025

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

minnal

வானிலையில் ஏற்படும் மாற்றம்

December 6, 2025

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, வடக்கு,

tn

பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புகிறது தமிழக அரசு!

December 6, 2025

‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப்

ve

வெலிமடை- நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீண்டும் திறப்பு

December 6, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக மூடப்பட்டிருந்த வெலிமடை- நுவரெலியா வீதி இன்று சனிக்கிழமை (06) மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக

mooth

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும் நடவடிக்கை

December 6, 2025

மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில்

Government

சம்பளமற்ற விடுமுறைகள் இடைநிறுத்தம்

December 6, 2025

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக,