தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ – தஹஅமுன பிரதேசத்தில் 168 கிலொமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்லவிலிருந்து மிரிஸ்ஸ நோக்கி நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த வேன் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் வேனின் சாரதியும் பின்னால் பயணித்த நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காயமடைந்துள்ளனர்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த நான்கு சுற்றுலாப் பயணிகளே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேன் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.