இங்கிலாந்துக்கெதிரான ஆஷஸ் தொடரின்போது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களை தயார்படுத்துமாறு அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க் வலியுறுத்தியுள்ளார்.
ஐந்து நாள் வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக ஆடுகளங்களைத் தட்டையாக்குவதை ஸ்டார்க் எச்சரித்துள்ளார்.
இந்தியாவுக்கெதிரான கடந்தாண்டுத் தொடரின்போது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்திலேயே அவ்வணியை 3-1 என அவுஸ்திரேலியா வென்றிருந்தது.