‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை நடைபெற்ற MILAN – 26 பலதரப்பு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வதேச போர்க்கப்பல்சள் கண்காணிப்பில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்திர ஆகிய கப்பல்கள், பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், பெப்ரவரி 27ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த இரண்டு கப்பல்களையும் கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

பிராந்திய மற்றும் உலகளாவிய பங்குதாரர்கள் பங்குபற்றிய (United Through Oceans) என்ற கருப்பொருளின் கீழ் நடைப்பெற்ற சர்வதேச கடற்படை கண்காணிப்பிலும், (Camaraderie Cohesion Collaboration) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற MILAN-26 பலதரப்பு கடற்படைப் பயிற்சியிலும் இலங்கை கடற்படை பங்கேற்றதன் மூலம், பரஸ்பர புரிதல் மூலம் கடல்சார் பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், கூட்டு அணுகுமுறை மூலம் கடல்சார் அபிலாஷைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் பதிலளிப்பதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பு பிரதிபலித்தது.

அதன்படி, துறைமுக அத்தியாயம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளவும், சர்வதேச கடல்சார் மாநாட்டில் பங்கேற்கவும் தரப்பினருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது.

சாகர மற்றும் நந்திமித்திர கப்பல்களின் அங்கத்துவ குழுவினர்கள், கலாச்சார நடவடிக்கைகள், தொழில்முறை தொடர்புகள், போர்க்கப்பல்களின் செயல்பாட்டுத் தயார்நிலை குறித்த கண்காணிப்பு சுற்றுப்பயணங்கள், சர்வதேச நகர அணிவகுப்பு மற்றும் உணவு கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு

tea

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்கான அதிபர் பதவிகளைப் பொறுப்பேற்க தயங்கும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள்?

March 3, 2026

கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிபர் பதவிகளுக்கு, அச்சேவையைச் சேர்ந்த பெரும்பாலான அதிகாரிகள் விண்ணப்பிக்க முன்வரவில்லை என்று ஆசிரியர்

d

நாட்டின் பிரதம நீதியரசர் மன்னாருக்கு விஜயம்

March 3, 2026

ட்டின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாருக்கு விஜயம்

nan

‘சாகர’, ‘நந்திமித்திர’ கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

March 3, 2026

இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை

iran

ஈரானில் இதுவரை 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

March 3, 2026

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல்

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்