சர்வதேச மொழிபெயர்ப்புத் தினம் – பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தில் விசேட நிகழ்வு

ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் 30ஆந் திகதி கொண்டாடப்படுகின்ற சர்வதேச மொழிபெயர்ப்புத் தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று இலங்கைப் பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 02 இல் கடந்த மாதம் 30ஆந் திகதி இடம்பெற்றது.

பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி சீ.ஜே. கருணாரத்னவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மனித குலத்தின் இருப்புக்கும், வளர்ச்சிக்கும் மொழி எனும் சிறப்பான ஆயுதம் பயன்படும் விதம் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சட்டத்தரணி சீ.ஜே. கருணாரத்ன, மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயரப்பின் முக்கியத்துவத்தை ஒட்டுமொத்த உலகமும் புரிந்து கொண்டுள்ள நிலையில் அதற்கான பெறுமதியை வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை, 2017ஆண்டு தொடக்கம் சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தி அதற்கான சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்ட மொழிபெயர்ப்புத் துறையின் தொழில்வல்லுநர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் மகிழ்ச்சியடையக் கூடிய காரணங்கள் பல உள்ளன. இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்டவாக்கச் செயற்பாடுகளில் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் உரைபெயர்ப்பாளர்களின் வகிபாகமானது, வெறுமனே ஒரு தொழிலாக மாத்திரமன்றி அது இனங்களுக்கிடையிலும், நாடுகளுக்கிடையிலும் ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற, மனிதர்களுக்கிடையிலான சந்தேகத்தைப் போக்குகின்ற தொழிலாக மாறியிருப்பது நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய விடயமாகும்.” எனக்குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைப் பாராளுமன்றத்தின் உரைபெயர்ப்பாளர் அலுவலகத்திற்கு மொழிபெயர்ப்பாளர்களையும் சேவை இணைப்புச் செய்து, மொழிபெயர்ப்பு பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கு பாராளுமன்றச் செயலாளர் நாயகம் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர உட்பட செயலாளர் குழாமும், சட்டவாக்கச் சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜயலத் பெரேராவும் வழங்கிவரும் ஒத்துழைப்பு போற்றுதலுக்குரியதாகும் என்றார்.

இந்நிகழ்வில் இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதி பிரதம பாராளுமன்ற உரைபெயரப்பாளர் ஆறுமுகம் சரவணபவானந்தன் கருத்து தெரிவிக்கையில், இப்புவியில் வாழும் ஏனைய உயிரினங்களை விட மனிதகுலம் பலம் பொருந்திய இனமாக தன்னை கட்டியெழுப்புவதற்கு அவனாலேயே கண்டுபிடிக்கப்பட்ட ஒப்பற்ற கருவியான மொழியைப் பற்றி மிக ஆழமாக விபரித்ததுடன், மொழிபெயர்ப்பு ஊடாக மனித குலம் நவீன உலகில் பெற்றுள்ள சிறப்பான வெற்றிகள் குறித்து சிலாகித்துப் பேசினார்.

பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் சங்கத்தின் தலைவர் சண்முகராஜா பிரதீப், உரைபெயர்ப்பாளர்களின் முன்னேற்றத்திற்கு தமது சங்கம் ஆற்றிவரும் சேவைகள் தொடர்பாக விளக்கமளித்தார். இதன்போது சர்வதேச மொழிபெயர்ப்புத் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினரால் பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களுக்கான ஒழுக்கநெறிக் கோவையின் வரைவு பிரதான பாராளுமன்ற உரைபெயர்ப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களின், மொழிபெயர்ப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி பிரதம பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர்களான ஏ.ஜி.எம். பிக்ரி, கே.டீ. ரொஹான் பத்மசிரி மற்றும் மொழி பெயர்ப்பாளரான ஏ.எப். பயாஸ் மொஹமட் ஆகியோர் சிறப்பான கருத்துக்களை தெரிவித்ததுடன், தலைமை பாராளுமன்ற உரைபெயர்ப்பாளர் என்.பீ.சீ.ஜே. நிஸ்ஸங்க நிகழ்ச்சியை மிகத் திறம்பட தொகுத்து வழங்கினார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்