சர்வதேச கடற்றொழிலாளர் தினம்; முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் நடைபவனி

முல்லைத்தீவு கடற்கரையில் சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தை முன்னிட்டு “சர்வதேச மீன்பிடியை ஒழித்து எமது உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இடம்பெற்றுள்ளது.

சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட கரையோர இளைஞர்கள் இணைந்து நேற்றையதினம்(21.11.2025) காலை நடைபெற்ற இந்நடைபவனியில், கடல்சார் வளங்களை பாதுகாக்கவும், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

சட்டவிரோத கடற்றொழிலை இலங்கை அரசாங்கம் முற்றுமுழுதாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நடைபவனியில் பங்கேற்ற இளைஞர்கள் முல்லைத்தீவின் இளம் கடற்றொழிலாளர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் வேண்டும், முல்லைத்தீவு கடற்கரையை காக்க சட்டவிரோத மீன்பிடியை நிறுத்தவும், கடலை பாதுகாப்போம் சட்டவிரோதத்தை தடுப்போம், எங்கள் பாரம்பரிய கடலில் உங்கள் சட்டவிரோத படகுகள் வேண்டாம் போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு நடைபவனியில் கலந்து கொண்டனர்.

நடைபவனியின் நிறைவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், தயாரிக்கப்பட்ட மகஜர் ஊடகங்களுக்கு வாசித்து விளக்கப்பட்டதுடன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மகஜரினை மாவட்ட செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தரிடம் அதிகார பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நடைபவனியின் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் இணை இணைப்பாளர்களான மதுசனா , சயந்தன் மற்றும் உத்தியோகத்தர்கள் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சி.பிரதாஷ், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த