சரியான கல்விச் சீர்திருத்தங்களே இந்த நாட்டிற்கு அவசியம் – திலித்

சரியான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த நாட்டிற்கு அவசியமானவை என்றும், அது அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வஜன பலயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

பதவிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே திலித் ஜயவீர இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

“நவீன கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என்று நாம் கூறத் தொடங்கி இருபது வருடங்களாகிவிட்டன. இப்போது சீர்திருத்தங்கள் அவசியம். ஆனால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ள முதலாவது அரிச்சுவடிப் புத்தகத்தில் பாட்டனுக்கு பாட்டி என்றும் பாட்டிக்கு பாட்டன் என்றும் போடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தவறுகளே உள்ளன. அரசாங்கம் கொண்டுவரும் விடயத்திற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று… சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று யாராவது சொன்னால்… அது மிகப்பெரிய முட்டாள்தனமான கதையாகும்.

இதில் ஒரு ‘சிறப்பான’ புத்தகம் உள்ளது. ஆறாம் வகுப்புக்காகத் தயாரிக்கப்பட்டு புத்தகத்தில் உலகப் புகழ் பெற்ற தொழில் முயற்சியாளர்களின் பெயர்கள் உள்ளன. முதலாமவர் – ஏ.டி. ஆரியரத்ன. ஏ.டி. ஆரியரத்ன தொழில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், உலகத்தில் யார் நினைக்கிறார்கள்? இலங்கையில் யார் நினைக்கிறார்கள்? உபாலி விஜேவர்தன வாழ்ந்த நாடு இது. அடுத்ததாக எமது சித்தாலோப முதலாளியைப் போட்டுள்ளார்கள்.

உலகப் புகழ் பெற்ற இரண்டாவது தொழில் முயற்சியாளர் ஹெட்டிகொட அவர்களாம். மூன்றாவது இடத்தில், சிறிய கடையொன்றை நடத்திச் செல்லும் அச்சலா என்ற எனக்குத் தெரிந்த தங்கையொருவரின் பெயரைப் போட்டுள்ளார்கள். அவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கேட்டபோது, தனது பெயர் ஏன் போடப்பட்டுள்ளது என்று அவருக்கே தெரியவில்லை.

அடுத்ததாக பில் கேட்ஸ் உள்ளார், அதன் பிறகு வாரன் பஃபெட் உள்ளார். அதன் பிறகு எலான் மஸ்க். இவர்களுக்கு இடையில்தான் ஹெட்டிகொடவின் பெயரும், ஆரியரத்னவின் பெயரும் உள்ளது. இவர்களுக்குப் பைத்தியமா? உலகப் புகழ் பெற்ற தொழில் முயற்சியாளர்கள் என்று சொல்வதற்கு இந்த நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? உலகையே அதிரவைத்த தொழில் முயற்சியாளர்கள். இப்போதும் அதிரவைக்கும் வர்த்தக நாமங்கள் எத்தனை உள்ளன? இந்தப் பக்கத்தை வாசித்த எந்தவொரு சிறுபிள்ளையும் வாழ்க்கையில் தொழில் முயற்சியான்மையைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்தத் தொகுதிகளில் என்ன இருக்கிறது என்று நீங்களே சும்மா வாசித்துப் பாருங்கள்.

ஆகவே இதனைச் சீர்திருத்துங்கள் என்றே நாம் சொல்கிறோம். நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். நாங்கள் யோசனைகளை முன்வைக்கிறோம். முன்னோடித் திட்டமொன்றை ஆரம்பித்து, பெற்றோரின் கருத்துக்களைப் பெற்று, பிள்ளைகளின் கருத்துக்களைப் பெற்று, ஆசிரியர்களின் கருத்துக்களைப் பெற்று, கல்வி நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று இதனைச் செய்வோம் என்றே சொல்கிறோம். வேண்டாம் என்று சொல்லவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்