சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் இன்று வியாழக்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வென்றது.
சிற்றி சார்பாக நிக்கோ ஓ ரெய்லி, எர்லிங் ஹலான்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொட்றிகோ பெற்றிருந்தார்.
இதேவேளை லா லிகா கழகமான அத்லெட்டிக் பில்பாவோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைனுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இந்நிலையில் போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி தோற்றது.