ஐக்கிய அமெரிக்க மேஜர் லீக் சொக்கர் (எம்.எல்.எஸ்) கிண்ணத் தொடரில் லியனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி சம்பியனானது.
தமது மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வன்கூவர் வைட்கப்ஸை வென்றே மியாமி சம்பியனானது.
மியாமி சார்பாக றொட்றிகோ டீ போல், தடியோ அலென்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. இரண்டு கோல்களைப் பெறுவதற்கான பந்துப் பரிமாற்றங்களை மெஸ்ஸி வழங்கியிருந்தார். வன்கூவர் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலி அஹ்மட் பெற்றிருந்தார்.
இத்தொடரின் பெறுமதி வாய்ந்த வீரராக மெஸ்ஸி தெரிவானார்.