சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கண்டங்களுக்கிடையிலான கிண்ணத் தொடரில் பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.
கட்டாரில் நடைபெற்ற பிரேஸிலியக் கழகமான பிளெமெங்கோவுடனான இறுதிப் போட்டியில் பெனால்டியில் வென்றே பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.
இப்போட்டியின் வழமையான நேரத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இரண்டு அணிகளும் சமநிலையில் காணப்பட்டதுடன், மேலதிக நேர முடிவிலும் அவ்வாறே காணப்பட்டிருந்தன. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிவிச்சா கவர்செலியா பெற்றதோடு, பிளெமெங்கோ சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோர்ஜினியோ பெற்றிருந்தார்.
பரிஸ் ஸா ஜெர்மைனின் உஸ்மான் டெம்பிலியின் பெனால்டி கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதுடன், பிராட்லி பார்கோலாவின் பெனால்டியை பிளெமெங்கோவின் கோல் காப்பாளர் அகஸ்டின் றோஸி தடுத்திருந்தார். இந்நிலையில் பரிஸ் ஸா ஜெர்மைனின் நுனோ மென்டிஸ் பெனால்டியை உட் செலுத்த 2-1 என்ற ரீதியில் பெனால்டியில் வென்று பரிஸ் ஸா ஜெர்மைன் சம்பியனானது.