சமூக மற்றும் பாடசாலை மட்டத்தில் கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வு அவசியம் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மேல் மாகாண கழிவு முகாமைத்துவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசேட உபகுழுவின் கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் நவம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, மேல் மாகாணத்தின் வீடுகள், வீதிகள், நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் வெளியேற்றும் நகரத் திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் தற்போதைய நிலை, திண்மக் கழிவுகளால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் கழிவு முகாமைத்துவம் பற்றிய நிபுணத்துவமிக்க உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, கழிவு முகாமைத்துவத்திற்குப் பொருத்தமான நிலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போதாமையினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், கழிவு முகாமைத்துவம் தொடர்பில் சமூக மட்டத்திலும் பாடசாலை மட்டத்திலும் முறையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியதோடு, இதற்கு ‘பிரஜா சக்தி’ மற்றும் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ ஆகிய செயற்திட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பாரிய பணியை முன்னெடுக்க முடியும் என்பதை வலியுறுத்தினார்.

தொழிற்கல்வித் துறையுடன் இணைந்து, கழிவு முகாமைத்துவத்தைப் புதியதொரு தொழில்சார் கற்கையாக அறிமுகப்படுத்துவதன் மூலம், கழிவு முகாமைத்துவம் குறித்த சமூகப் புரிதலை ஏற்படுத்தவும், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான லக்ஷ்மன் நிபுணாரச்சி, பாராளுமன்ற உறுப்பினரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் தலைவருமான சந்தன சூரியாரச்சி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக்க குமார, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

By C.G.Prashanthan

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்