பெரம்பலூர்:
இடஒதுக்கீடு மானியக் கோரிக்கையில் பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட சமூக நீதித் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டது குறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் கீழ் ரூ. 4.48 கோடி மதிப்பிலான 13 புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்து, 161 பயனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:
தலைவர்கள் பெயர் விவகாரம்
-
“இடஒதுக்கீடு மானியக் கோரிக்கையில் சமூக நீதித் தலைவர்களின் பெயர்களை த.வெ.க. அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு நீக்கவில்லை. பெரியார், அம்பேத்கர் ஆகியோர் எங்கள் இயக்கத்தின் கொள்கைத் தலைவர்கள்.”
-
“முந்தைய தி.மு.க. ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக நேரு, பெரியார், அம்பேத்கர் பெயர்கள் இத்திட்டத்தில் இடம்பெறாமல் இருந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர்கள் விரைவில் இடஒதுக்கீடு மானியக் கோரிக்கையில் சேர்க்கப்படும்.”
ஆர்.எஸ். பாரதிக்கு பதிலடி
-
மே மாதத்திற்குள் த.வெ.க. அரசு கவிழ்ந்து மறுதேர்தல் வரும் என தி.மு.க.வின் ஆர்.எஸ். பாரதி கூறியதற்குப் பதிலளித்த அவர், “‘கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்’ என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது; எதார்த்தம் புரியாமல் தி.மு.க.வினர் பேசி வருகின்றனர்” என்றார்.
மகளிருக்கு மாதவிடாய் விடுமுறை
-
“அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிப்பது தொடர்பான நீதிமன்றத்தின் கருத்தை அரசு தீவிரமாகப் பரிசீலிக்கும். அனைத்துத் துறை அதிகாரிகளுடனும் ஆலோசித்து, அரசுப் பெண் ஊழியர்களுக்குப் பாரபட்சமின்றி விடுமுறை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”
Hashtags:
#MinisterRajmohan #TVKGovt #SchoolEducationTN #SocialJustice #Periyar #Ambedkar #PerambalurNews #TNPolitics #MenstrualLeave #TamilNaduNews #TamilNews #BreakingNewsTamil #TrendingNewsTamil