சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு; நடிகர் ஜெயராமுக்கு அழைப்பாணை

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேரள மாநிலத்தில் உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது.இந்த ஐயப்பன் கருவறைக்கு வெளியே துவார பாலகர்கள் சிலைகள் தங்க முலாம் பூசப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிலின் புனரமைப்பு பணிகள் நடந்தனர்.

அப்போது தங்க முலாம் பூச துவார பாலகர்கள் சிலைகளை சென்னைக்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.பின்னர் தங்க முலாம் பூசப்பட்டதங்க தகடுகள் துவார பாலகர்கள் சிலைகள் மீது அணியப்பட்டது.அப்போது சுமார் 4 கிலோ தங்கம் திருடு போனதாக குற்றச்சாட்டி எழுந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கேரள நீதிமன்ற தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது, கேரள மாநிலத்தின்கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.தொடர்ந்தூ சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையில், சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் உருக்கப்பட்ட தங்கத்தை, உன்னிகிருஷ்ணன் போத்தி கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ‘கோவர்தன்’ என்ற நகைக்கடை உரிமையாளரிடம் விற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அவர் 476 கிராம் தங்கத்தை விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, தேவசம் வாரியத்தின் முன்னாள் தலைவர், இந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போத்தி, முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, தேவஸ்வம் செயலர் ஜெயஸ்ரீ ஆகியோரைப் போலவே, முன்னாள் திருவாபரண கமிஷனர்கள் பைஜூ மற்றும் ராதாகிருஷ்ணன், முன்னாள் எக்ஸிகியூட்டிவ் அதிகாரிகள் சுதீஷ்குமார், ராஜேந்திர பிரசாத், அசிஸ்டெண்ட் இன்ஜினியர் சுனில்குமார் உட்பட மொத்தம் 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தங்கக் கவசங்களில் உள்ள தங்கம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டபோது, அவை நடிகர் ஜெயராமின் இல்லத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவருடன், நடிகர் ஜெயராம் நீண்ட காலமாக தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சென்னை வந்த சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நடிகர் ஜெயராமின் இல்லத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த தீர்மானித்து, ஜெயராமுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அடுத்த வாரம் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில், கடந்த மாதம் மத்திய அரசின் அனுமதியுடன் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 12 பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதில், சம்மன் பெற்ற 12 பேரில் மூன்று பேர்களின் பெயர்கள் மட்டுமே சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு