சட்ட ரீதியாக எனக்கு கிடைக்க வேண்டிய உரிமையைக் கோரினேன் ஆனால் அது மறுக்கப்பட்டுள்ளது – முன்னாள் நீதிபதி இளஞ்செழியன்

நீதி, நியாயம், சட்டம், நீதிமன்றம் ஆகிய 4 விடயங்களுக்கு மாத்திரமே நான் தலை குனிந்தேன். வேறு எதற்கும் நான் தலைகுனியவில்லை. வேறு எதற்காகவும் தலைகுனிந்ததாக எனது வரலாற்றில் இல்லை. அவ்வாறானதொரு வரலாறு எழுதப்படவும் கூடாது. சட்ட ரீதியாக எனக்கு கிடைக்க வேண்டிய உரிமையைக் கோரினேன். அந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அதற்காக யார் மீதும் குறைகூற நான் விரும்பவில்லை. எனது நீதித்துறை புனிதமானது என முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்றங்களில் இவ்வாண்டு ஜனவரியில் 4 வெற்றிடங்கள் நிலவிய அந்த சந்தர்ப்பத்தில், நான் சிரேஷ்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தேன். ஆனால் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், அவற்றுக்கு பதில் கிடைக்கவில்லை. உரிமைக்கான தனது கோரிக்கை மறுக்கப்பட்டுவிட்டதாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற அவருக்கான கௌரவிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, மிகவும் உருக்கத்துடன் அவர் இதனைத் தெரிவித்திருந்தார். குறித்த நிகழ்வில் இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் 50 ஆண்டு கால வரலாற்றில் ஒரேயொரு தமிழனாக ஏகமனதாக அதன் தலைவராக நியமிக்கப்பட்டேன். 2024ஆம் ஆண்டு மேல் நீதிமன்றத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா என் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதன் பின்னர், மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத் தலைவராக எனது நிறைவேற்றுக்குழு அவரை சந்திக்க விரும்புவதாக அவருக்கு கடிதம் எழுதினேன்.

கடந்த ஆண்டு நவம்பரில் ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனது தலைமையில் 10 நீதிபதிகள் அந்த சந்திப்பில் பங்கேற்றோம். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அந்த சந்திப்பில் ஒரேயொரு தமிழராக நான் பங்கேற்றிருந்தேன். என்னுடன் குறித்த சந்திப்பில் பங்கேற்ற சிங்கள சகோதரர்கள், உன்னுடைய ஓய்வு தொடர்பில் நாம் பேசுகின்றோம் எனக் கூறினர். 2025 ஜனவரி 20ஆம் திகதியுடன் 60 வயதாகிறது.

ஒட்டுமொத்தமாகவுள்ள 90 நீதிபதிகளில் முதலாவதாக நீதிபதி இளஞ்செழியன் காணப்படுகிறார் எனக் கூறி, வருட இறுதி விடுமுறை என்பதால் எனது நியமனத்தை நினைவுபடுத்துவதாக ஜனாதிபதியிடம் கூறினார்கள். அன்று ஜனாதிபதி என்னுடன் நின்று புகைப்படமொன்றையும் எடுத்துக் கொண்டார். இன்றும் அந்த புகைப்படம் என்வசம் இருக்கிறது. மகிழ்ச்சியோடு அன்று எம்முடன் உரையாடினார்.

2025 ஜனவரி 12ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து 4 நீதிபதிகள் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றனர். மேல் நீதிமன்றங்களில் 4 வெற்றிடங்கள் நிலவிய அந்த சந்தர்ப்பத்தில், நான் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தேன். 61 வயது பூர்த்தியாவதற்கு 8 நாட்களே காணப்பட்டது. 61 வயது நிறைவடைவதற்குள் பதவியுயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே சட்டமாகும். ஜனவரி 13ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனா சென்று, 18ஆம் திகதி சனிக்கிழமை நாடு திரும்பினார்.

19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை. 20ஆம் திகதி நான் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினேன். எனக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால், இன்னும் 4 ஆண்டுகள் சேவையில் நீடித்திருப்பேன். இரண்டு ஆண்டுகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் இரண்டு ஆண்டுகள் உயர் நீதிமன்றத்திலும் சேவையாற்றியிருப்பேன். நான் விரும்பி ஓய்வு பெறவில்லை. கட்டாயப்படுத்தி ஓய்வில் அனுப்பப்பட்டேன் என்பதை தெரிவித்து நான்கு கடிதங்கள் அனுப்பியிருக்கின்றேன்.

ஆனால் எந்தவொரு கடிதத்துக்கும் எனக்கு பதில் கிடைக்கவில்லை. ஒரு நீதிபதியாக என்னால் யாரையும் குறைகூற முடியாது. எனது விடயத்தில் எங்கு தவறு இடம்பெற்றது? அந்த தவறு ஏன் நிவர்த்தி செய்யப்படவில்லை? இன்று கூட அந்த தவறு நிவர்த்தி செய்யப்படலாம். ஆனால் அந்த சிந்தனை யாருக்கும் இல்லை. ஆனால் நான் அதன் பின்னால் செல்லவில்லை.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த