சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி

கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த ரிப்பர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இச் சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் வயது 35 என்பவரே பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி நகரிலிருந்து இரணைமடு நோக்கி தனது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவர் வில்சன் வீதி மொட்டை பாலத்திற்கு அருகில் வீதியின் ஓரமாக உந்துருளியை நிறுத்த முற்பட்ட போது அவரை பின் தொடர்ந்து மணலுடன் வந்த ரிப்பர் உந்துருளியை நோக்கி நெருங்கி வருவதனை அவதானித்த மனைவி உந்துருளியிலிருந்து வேகமாக இறங்கி வீதியின் மறுபுறம் ஓடியுள்ளார்.

அந்த சமயத்தில் ரிப்பர் குறித்த நபரின் மீது மோதியத்தில் அவர் ரிப்பரின் பின்பக்க சில்லுக்குள் சிக்குண்டதோடு மணலும் அவரின் மீது கொட்டியத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காட்சிகளிலும் மேலே குறிப்பிட்டவாறே பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் போது ரிப்பர் சட்டவிரோத மணலுடன் காணப்பட்டதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

திருவையாறு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களுக்கு சம்பவத்தில் இறந்தவர் தகவல் தெரிவித்து வருபவர் என்பதுடன் 119 க்கும் தகவல் வழங்கியவர் எனவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே இச் சம்பவம் விபத்தாக இருக்க முடியாது என்றும் இது திட்டமிடப்பட்ட
கொலையாகவே காணப்படுகிறது என்று உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

sa

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி

December 10, 2025

கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த

tn

பரந்தன் – முல்லைத்தீவு பாலம் புனரமைப்பைப் பார்வையிட்ட இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி!

December 10, 2025

பரந்தன் – முல்லைத்தீவு A-35வீதியின் பதினோறாவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய

aji ca

மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் குற்றமற்றவர் – நீதிமன்றம்

December 10, 2025

மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என

pra

வெள்ள அனர்த்த பாதிப்பு: கொடுப்பனவுகளை விரைவாக வைப்பிலிடுமாறு அரச அதிபர் பணிப்பு

December 10, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட உலர் உணவு நிவாரணக்கொடுப்பனவு மற்றும் ரூபா 25000 கொடுப்பனவுகளை விரைவாக வைப்பிலிடுமாறு

vi

த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை – பிரவீன் சக்கரவர்த்தி

December 10, 2025

“த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை; தி.மு.க., கூட்டணியிலும் குழப்பம் இல்லை,” என, காங்கிரஸ் கட்சியின் தரவு

indi

9 வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு

December 10, 2025

பல்வேறு குளறுபடிகளால் இண்டிகோ விமான சேவை 9வது நாளாக இன்று பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 14 விமானங்கள் ரத்து

nayina

திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும்

December 10, 2025

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

rag

ராகுல் காந்தியை பா.ஜ கடும் விமர்சனம்

December 10, 2025

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை புறக்கணித்து விட்டு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஜெர்மனி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதை பாஜ கடுமையாக

pann

சட்டசபை தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்

December 10, 2025

அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என பொதுக்குழுவில் பேசுகையில் அதிமுக பொதுச்செயலாளர்

am

அம்பாறை மக்களால் நுவரெலியா மக்களுக்கு நிவாரணம்

December 10, 2025

பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், அம்பாறை மாவட்டம் தம்பட்டை, தம்பிலுவில்,

not

பாலத்தை புனரமைக்கும் பணியில் இராணுவம்

December 10, 2025

ஹட்டன் – நோர்டன் பிரதான வீதிப் பாலத்தை புனரமைக்கும் பணியில் இராணுவம் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காசல்ரீ

ka

கயிறு தடக்கி கடலில் வீழ்ந்தவர் உயிரிழப்பு!

December 10, 2025

‘நெடுந்தாரகை’ பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.