சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றை ஏய்க்க முயன்ற பசில் ராஜபக்ஷ

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இலங்கைக்கு வருகை தர விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்த போதும் அவை ரத்து செய்யப்பட்டதாக மாத்தறை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் முறைகேடான பணத்தைப் பயன்படுத்தி காணி கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தகவல்கள் தெரியவந்தன.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைத் தவிர, அவரது மனைவியின் சகோதரி அயூமா கலப்பத்தி, அவரது கணவர் திஸ்ஸா கலப்பத்தி மற்றும் முதிதா ஜெயக்கொடி ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​பசில் ராஜபக்ஷ மற்றும் அயூமா கலப்பத்தி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, மேலும் அவர்களின் பிணைத்தாரர்கள் மட்டுமே அவர்கள் சார்பாக ஆஜராகியுள்ளனர்.

பசில் ராஜபக்ஷ சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனில் சில்வா, தனது கட்சிக்காரரின் மருத்துவ நிலையை உறுதிப்படுத்தும் பல மருத்துவ அறிக்கைகள் அடங்கிய ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அறிக்கைகளை ஆய்வு செய்த பின்னர் சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, சந்தேக நபரின் மருத்துவ நிலைமைகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

“இந்த வழக்கின் மூன்றாவது சந்தேக நபரான பசில் ராஜபக்ஷ, கடைசியாக 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் திகதி அன்று இந்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

அதாவது இந்த சந்தேக நபர் ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் இல்லாததால், இந்த வழக்கு தாமதமாகிறது.

முந்தைய விசாரணையில், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

அன்றைய விசாரணையின் போது மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்த ஜனாதிபதி வழக்கறிஞர், சந்தேக நபர் திடீரென நாற்காலியில் இருந்து விழுந்த விபத்தில் தலை மற்றும் கழுத்தில் நரம்பு காயம் அடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

அன்று சமர்ப்பிக்கப்பட்ட எக்ஸ்ரே அறிக்கைகளின்படி, சந்தேக நபருக்கு எலும்பு முறிவு இல்லை என்பது தெளிவாகிறது. அன்று மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்த ஜனாதிபதி வழக்கறிஞர், சந்தேக நபர் இன்று (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

சந்தேக நபர் நாற்காலியில் இருந்து விழுந்துள்ளார் எனவும், சந்தேக நபர் தலை மற்றும் கழுத்தில் நரம்பு காயத்தால் அவதிப்பட்டு வருகின்றார் என்ற மருத்துவ அறிக்கைகள் ஜோர்ஜ் சிடி என்ற மருத்துவரால் வழங்கப்பட்டன.

எனினும் இன்று, அதே மருத்துவரின் கையொப்பத்தின் கீழ், சந்தேக நபர் இடது பக்கத்தில் உணர்வின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ அறிக்கைகள் ஒரே மருத்துவரால் வழங்கப்பட்டிருந்தாலும், இந்த மருத்துவ அறிக்கைகளின் லெட்டர்ஹெட்கள் முதல் பார்வையில் வேறுபட்டவை. மேலும், ஜோர்ஜ் சிடி என்ற இந்த மருத்துவர் ஒவ்வொரு அறிக்கையிலும் சந்தேக நபரின் அறிகுறிகளை மட்டுமே குறிப்பிட்டு, அவர் விமானப் பயணத்திற்குத் தகுதியற்றவர் என பரிந்துரைத்துள்ளார்.

சந்தேக நபர் விமானத்தில் பயணிக்க தகுதியற்றவர் என்று மருத்துவர் பரிந்துரைத்த போதிலும், சந்தேக நபர் இன்று இலங்கைக்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பின்னர் அந்த டிக்கெட்டுகளை இரத்து செய்துள்ளார்.

இந்த மருத்துவர் கடந்த செப்டம்பர் 14,ஆம் திகதி அன்று சந்தேக நபரின் மருத்துவ நிலை, அவர் விமானத்தில் பயணிக்கத் தகுதியற்றவர் என்று பரிந்துரைத்துள்ளார்.

எனினும், சந்தேக நபர் நவம்பர் 18-21 க்கு இடையில் விமானத்தில் இலங்கைக்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய செப்டம்பர் 25ஆம் திகதி அன்று ஒரு விமான நிறுவனத்திற்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார்.

எனினும் சந்தேக நபர் பின்னர் ஒக்டோபரில் அவற்றை ரத்து செய்துள்ளார். மேலும் சந்தேக நபருக்கு விமான நிறுவனம் அனுப்பிய விமானச் சரிபார்ப்பு படிவத்தில், அவர் வேறொரு நபரின் உதவியுடன் வழக்கமாக விமானத்தில் பயணிக்க முடியும் என்று தெளிவாகக் கூறுகிறது.

அந்த படிவத்தில் விமானத்தில் சிறப்பு நாற்காலி, படுக்கை அல்லது ஒக்ஸிஜன் தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, சந்தேக நபரின் மருத்துவ நிலை குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதால், இது தொடர்பாக ஒரு உத்தரவைப் பிறப்பிக்குமாறு என துணை சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தைக் கோரினார்.

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 84 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை