டல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 80 இலட்சம் ரூபா பெறுமதியான கிருமிநாசினிகள் மற்றும் விதைகள் ஆகியவற்றுடன் ஹெம்மாத்தகம பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் வரி செலுத்தப்படாமல் கொண்டு வரப்பட்ட இந்தக் கிருமிநாசினிகள் மற்றும் விதைகள், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த போது கேகாலை நாரம்பத்த விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று (09) கைப்பற்றப்பட்டுள்ளன.
மிகவும் இரகசியமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தக் கிருமிநாசினிகள் தொடர்பில் கற்பிட்டி விமானப்படைத் தளத்தின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாகவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹெம்மாத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 45 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.