சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.

அத்துடன், புகலிடம் கோருவோருக்கு ‘தற்காலிகப் பாதுகாப்பு’ (Temporary Protection) மட்டுமே வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

புதிய விதிகளின்படி, அகதி அந்தஸ்து பெற்றவர்களின் வழக்குகள் ஒவ்வொரு 30 மாதங்களுக்கு ஒருமுறை (இரண்டரை ஆண்டுகள்) மறுபரிசீலனை செய்யப்படும்.

அந்த காலக்கட்டத்தில் அவர்களின் தாய்நாடு பாதுகாப்பானதாகக் கருதப்பட்டால், அவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் பிரித்தானியா கூறியுள்ளது.

இருப்பினும், தனியாக வந்து புகலிடம் கோரிய சிறுவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும். மற்றொரு சீர்திருத்தமாக, புலம்பெயர்ந்தோர் நிரந்தரக் குடியுரிமை (Permanent Residency) பெறுவதற்கான காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவுள்ளது.

அதாவது, அகதி அந்தஸ்து பெற்றவர்கள் நிரந்தர உரிமையைப் பெற 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். அண்மையில் டென்மார்க்கிற்கு விஜயம் செய்த ஷபானா மஹ்மூத், அங்குள்ள கடுமையான குடிவரவு விதிகளை அவதானித்து இந்த முடிவை எடுத்துள்ளார்.

சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் வருபவர்களுக்கு நமது நாடு கவர்ச்சிகரமானதாக இருக்கக்கூடாது என்பதே எமது நோக்கம் எனவும் அகதி அந்தஸ்து என்பது நிரந்தரமானது என்ற எண்ணத்தை மாற்ற விரும்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த மாற்றங்களால் அகதிகள் தங்களின் நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். அவர்களால் வேலைவாய்ப்புகளில் ஈடுபடவோ சமூகத்துடன் இணையவோ முடியாது என ‘அகதிகள் கவுன்சில்’ எச்சரித்துள்ளது.

இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்களை விடுதிகளில் தங்கவைக்கும் முறையை முடிவுக்குக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமை என்று கூறிய மஹ்மூத், இதில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்தலில் மக்கள் தொழிற் கட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டில் (2025) சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறிய படகுகள் மூலம் சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்