சட்டவாட்சி பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளதா?

தம்மிடம் இனவாதம், மதவாதம் இல்லை என்று மார்பு தட்டிய தேசிய மக்கள் சத்தியினர்,ச ட்டவாட்சியை விட்டுச் சறுக்கி விழுந்து, பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளார்கள் என்பதை சட்ட விரோத சிலை நிறுவுதலோடு, பொலிஸார் சம்பந்தப்பட்டுள்ளதில் இருந்து அறியமுடிகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையின் கடற்கரையோரமாக சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்று பௌத்த துறவிகளாலும், நல்லிணக்க விரோதிகளாலும் நிறுவப்பட்டுள்ளது.

சட்டவாட்சியை வலியுறுத்தும் தேசிய மக்கள் சக்தியினரின் அமைச்சர்,முதலில் அச்சிலையை சட்டவாட்சிப்படி அகற்ற நடவடிக்கை எடுத்தார்.

இதனால், தேசியமக்கள் சக்தியின் சட்டப்படியான செயலையிட்டு தமிழர்கள் திருப்தியடைந்தனர். ஆனால் சில மணித்தியாலங்களில் பொலிஸாரின் பாதுகாப்புடன், மீண்டும் அந்த சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தம்மிடம் இனவாதம், மதவாதம் இல்லை என்று மார்பு தட்டிய தேசிய மக்கள் சத்தியினர்,சட்டவாட்சியை விட்டுச் சறுக்கி விழுந்து, பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளார்கள் என்பதை சட்ட விரோத சிலை நிறுவுதலோடு, பொலிஸார் சம்பந்தப்பட்டுள்ளதில் இருந்து அறிய முடிகின்றது.

எனவே பௌத்த அடிப்படைவாதம் சட்டவாட்சியையும் கடந்து, எங்கும் பாயும் என்பதை திருமலைச் சம்பவம் இடித்துரைக்கிறது.

இந்நாட்டின் நல்லிணக்கம், நீதி என்பதெல்லாம் வெறும் கானல் நீராகவே உள்ளது. அடிப்படைவாதத்த்தின் அடிச்சுவடுகளில் இருந்து விலகி, இலங்கையின் எந்த அரசாங்கத்தாலும் சட்டவாட்சிப்படி நகர முடியாது என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

மாற்றத்தை ஏற்படுத்த வந்தவர்கள் தமிழ் பேசும் மக்களைச் சீற்றமுறச் செய்து விட்டனர்.தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த ஒவ்வொரு தமிழ்பேசும் குடிமகனும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த