zன்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் எரிசக்தித்துறை, செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்தி, டிஜிட்டல் நிதி மையம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
1. தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்:
மாநிலத்தின் அதிகரித்துவரும் மின் நுகர்வைக் கருத்தில் கொண்டு, ரூ.33,066 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன் கீழ் 196 புதிய துணை மின் நிலையங்களும், 15,000 கிலோ மீட்டர் புதிய மின் பாதைகளும் அமைக்கப்படுவதோடு, தற்போதைய மின் பாதைகளும் வலுப்படுத்தப்படும்.
2. தூத்துக்குடியில் புதிய சூப்பர்கிரிட்டிகல் அனல்மின் நிலையம்:
தற்போதுள்ள 210 மெகாவாட் அலகுகளைப் படிப்படியாக மாற்றியமைத்து, தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் புதிய சூப்பர்கிரிட்டிகல் அனல் மின் நிலையம் (New Supercritical Thermal Power Station) அமைக்கப்படும். தலா 800 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அலகுகளுடன், மொத்தமாக 1,600 மெகாவாட் திறன் கொண்ட இந்த நிலையம் ரூ.20,800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
3. சென்னை மின் பகிர்மானக் கட்டமைப்பு மேம்பாடு:
சென்னையில் மழை மற்றும் கோடைக்காலங்களில் ஏற்படும் மின்தடைகளைத் தவிர்க்கும் வகையில், ரூ.1,762 கோடி மதிப்பீட்டில் 36 புதிய துணை மின் நிலையங்கள் (33/11 KV), புதிய மின்மாற்றிகள் அமைத்தல் மற்றும் பழைய கேபிள்கள், பில்லர் பாக்ஸ்கள், சர்க்யூட் பிரேக்கர்களை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
4. காஞ்சிபுரத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா:
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் சிப்காட் (SIPCOT) மூலம் செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும். உலகத்தரத்திலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) வசதிகளுடன் கூடிய இப்பூங்கா மூலம் சுமார் ரூ.2,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
5. கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் (FinTech Hub):
டிட்கோ (TIDCO) மூலமாகப் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கோவை மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும். இதன் மூலம் உலகளாவிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, புத்தொழில் நிறுவனங்கள், நவீன ஆய்வகங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு வசதிகள் உருவாக்கப்படும்.
6. திருச்சியில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் (Multi Model Logistics Hub):
திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிகளவிலான தொழிற்சாலைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) உள்ளதைக் கருத்தில் கொண்டு, டிட்கோ மூலம் ஆய்வு மேற்கொண்டு திருச்சி மண்டலத்தில் ‘பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம்’ அமைக்கப்படும்.
Hashtags:
#ChiefMinisterVijay #TVKGovt #TNAssembly #Rule110 #TNEB #TNPowerProjects #CoimbatoreFintech #SemiconductorParkKanchipuram #TrichyLogisticsHub #TamilNaduNews #TamilNews #TNPolitics #BreakingNewsTamil #TrendingNewsTamil